Cyclone Tauktae; டக் தே சூறாவளியின் கோரத் தாண்டவம் புகைப்படங்களில்...

‘டவ் தே’ புயலின் தாக்கத்தால் 120 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதுவரை 14 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் அடைமழை பெய்தது. கேரளா மற்றும் கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. மத்திய - மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

Also Read | Ki.Ra: கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

1 /6

குஜராத்தில்  2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   

2 /6

சூறாவளி புயல் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்

3 /6

திங்கள்கிழமை இரவு டியூ அருகே குஜராத்தின் சவுராஷ்டிரா கடற்கரையில் மணிக்கு 185 கி.மீ வேகத்தில்  சூறாவளிக் காற்று வீசிக் கொண்டு டக் தே புயல் கரையைக் கடந்தது.

4 /6

குஜராத்தில் தேசிய பேரிடர் நிவாரண படை (NDRF) 44 அணிகளை நிறுத்தியுள்ளது

5 /6

மும்பை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

6 /6

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா-ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது.