Lemon Side Effects: எலுமிச்சை தரும் பக்க விளைவுகள்

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மைகள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் எலுமிச்சை பழத்தை அதிகம் உட்கொண்டால் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி தவிர, எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன. ஆனால் சிலருக்கு எலுமிச்சை மிகவும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

1 /5

அமிலத்தன்மை: அமிலத்தன்மை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் எலுமிச்சை நீரை உட்கொள்ள விரும்பினால், வெதுவெதுப்பானதாக தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த பிறகு, தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.

2 /5

வாய் புண்: உங்களுக்கு வாய் புண் இருந்தால் நீங்கள் எலுமிச்சை சாப்பிடடுவதை தவிர்க்கவும். நீங்கள் எலுமிச்சை சாப்பிட்டால், அது எரிச்சல் மற்றும் வீக்கம் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

3 /5

சிறுநீரக பிரச்சனை: உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

4 /5

நெஞ்சிஎரிச்சலை உண்டாகுக்கும்: எலுமிச்சை சாறு வயிறு உபாதைகளை தீர்க்கும் அதிகமாக பயன்படுத்தினால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம்  நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கி விடும்.

5 /5

சருமத்தை வறட்சியாக்கும்: எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சிசுக்களை நீக்கும்.வறட்சியான அல்லது எண்ணெய் பிசுக்கு குறைவான சருமத்தில் தேய்க்கும் போது அது சருமத்தை மேலும் வறட்சியாக்கும்.