எப்போதும் இளமையாக இருக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்..!

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் சில எளிமையான உடற்பயிற்சிகளை செய்தால் போதும்.

இளமையான தோற்றத்தோடு இருக்க வேண்டும் என விரும்புவர்கள் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

 

1 /8

வாழ்க்கை முறை சரியாக இருக்கவில்லை என்றால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் தினமும் ஆரோக்கியமான உணவு முறை முதல் உடற்பயிற்சி வரை சரியாக கடைபிடிக்க வேண்டும். 

2 /8

அந்தவகையில் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்தால் எப்போதும் இளமையான தோற்றத்தை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

3 /8

இளமையாக இருக்க விரும்புவர்கள் எப்போதும் மனம் ஆரோக்கியத்தை பேண வேண்டும். அந்தவகையில் தியானம், யோகா தினமும் செய்யுங்கள்  

4 /8

இதுதவிர, பலத்தை அதிகரிக்கும் ஒரு சில பயிற்சிகளையும் செய்யுங்கள். கம்பியில் தண்டாள் எடுப்பது, வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்  

5 /8

காலை, மாலை என இருவேளைகளிலும் வாக்கிங் செல்லுங்கள். அதிவேகமாக நடக்கவும். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் இந்த பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.

6 /8

இளமையாக இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தவறாமல் நீச்சல் பயிற்சியை செய்யுங்கள். பாதுகாப்பான முறையில் செய்யக்கூடிய இந்த பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

7 /8

அடுத்தாக, கை, கால்களை நீட்டி, வளைத்து மடக்கி பயிற்சி செய்யுங்கள். பல கோணங்களில் இந்த பயிற்சியை செய்யும்போது தசைகள் இலகுவாகவும், பலமாகவும் மாறும்.   

8 /8

இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.