ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? அதுவும் இந்த பிரமாண்ட படத்திலா?

தமிழ் சினிமாவின் கவர்ச்சியான நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா தனது திரைப்பட வாழ்க்கையில் தனகென ஒரு பாணியமைத்து சிறந்த நடிகராக வளம்வருகிறார்.

 

1 /5

சூர்யா சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார், மேலும் அவர் தயாரித்த 'ஜெய் பீம்'-லும் அவரது பாத்திரத்திற்காக பாராட்டப்பட்டார்.  

2 /5

ஐந்து பாகங்களாக வெளிவந்த ’வேள்பாரி’ நாவலை அடிப்படையாக வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் தற்போது பரபரப்பான செய்தி.  

3 /5

இருப்பினும் யாஷ் மற்றும் ரன்வீர் சிங் போன்ற மற்ற நட்சத்திரங்களை ஷங்கர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தளபதி விஜய்யின் பெயர் கூட சில முறை குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.  

4 /5

மேலும், வேள்பாரி நாவலைப் போலவே இந்தப் படமும் ஐந்து பாகங்களாக வெளிவரவுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.  

5 /5

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார், கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஷங்கர் உள்ளார். இதற்கு பின் ஷங்கர் மற்றும் சூர்யா இணைவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.