T20 World Cup 2021 போட்டித்தொடரில் கவனம் பெறும் முக்கிய கிரிக்கெட்டர்கள்

ஏழாவது டி 20 உலகக் கோப்பை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்குகிறது.

கிறிஸ் கெய்ல், விராட் கோலி மற்றும் பாபர் ஆஸம் போன்ற சிறந்த கிரிக்கெட்டர்களைத் தவிர பலர் உலகளாவிய சூப்பர் ஸ்டார்கள் என்று பெயர் பெறும் வாய்ப்புகள் 

பிரகாசமாகத் தெரிகிறது. அந்த வாய்ப்புகள் இந்த ஆறு பேருக்கு அதிகமாக இருக்கிறது....

(Photograph courtesy:ICC twitter)

Also Read | T20 World Cup இந்திய-பாகிஸ்தான் போட்டி பற்றி சவுரவ் கங்குலி கருத்து

1 /6

இந்தியா லிட்டில் மாஸ்டர் இஷான் கிஷன் ஐந்து அடி ஆறு அங்குல (1.68 மீ) கிஷன், நம்பிக்கை நட்சத்திரமாக இந்த டி-20 உலக்கோப்பை போட்டித்தொடரில் உருவெடுக்கலாம். மார்ச் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி 20 போட்டியில் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 23 வயதான இஷான் ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களையும், ஹைதராபாத்திற்கு எதிராக 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்துள்ளார்.  (Photograph:AFP)

2 /6

மூன்று மாதங்களுக்கு முன்பு, கோவிட் -19 கட்டுப்பாடுகளை மீறியதால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஹைதர் அலி, உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் தேசிய டி 20 கோப்பையில் 21 வயது மிடில்-ஆர்டர் பேட்டர், மூன்று அரைசதங்கள் உட்பட பல அற்புதங்களை நிகழ்த்தினார். எனவே ஹைதர் இந்த டி20 உலகக்கோப்பையில் சோபிக்கலாம். (Photograph:AFP)

3 /6

சர்வதேச கிரிக்கெட்டில் அருமையான பந்துவீச்சாளர்களில் ஒருவரான மில்ஸ், நான்கரை வருடங்களுக்குப் பிறகு, டி 20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கிறார்.  காயமடைந்த வேகபந்து வீச்சாலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக மில்ஸ் தற்போது இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். (Photograph:AFP)

4 /6

டி 20யில் சிக்ஸர்கள் மிகவும் பிரபலமானது. அதனால்தான் க்ளென் பிலிப்ஸுக்கு இந்த டி20 உலகக்கோப்பைக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.  (Photograph:AFP)

5 /6

தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவுக்கு தற்போது ஒளியூட்டுபவர் தப்ரைஸ் ஷம்சி. இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2019 இல் இம்ரான் தாஹிர் ஓய்வு பெற்றதால் அணிக்குள் வந்திருக்கிறார்.  31 வயதாகும், ஷம்சி உலகின் மிக உயர்ந்த டி20 பந்துவீச்சாளர், ஏற்கனவே இந்த ஆண்டு உலக அளவில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஓவர் ஒன்றுக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாக கொடுத்து, சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார்.   (Photograph:AFP)

6 /6

ஆப்கானிஸ்தான் நம்பிக்கை நட்சத்திரமாக இருகிறார் ஹஸ்ரத்துல்லா ஜசாய். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உள்நாட்டு டி 20 போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து வெறும் 12 பந்துகளில் 50 ரன்களை எடுத்து சரித்திரம் படைத்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் தனது ஐந்தாவது டி 20 போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 16 சிக்சர்களை அடித்து 162 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ஹஸ்ரத்துல்லா ஜசாய். (Photograph:AFP)