இதுவரை டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோக்கள்!

அன்றிலிருந்து இன்று வரை டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோக்களின் பட்டியல்.

 

தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் செயலாற்றும் நபர்களுக்கு பாராட்டு அளிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு கௌரவ பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறது.  இதில் கலைத்துறையில் சாதிக்கும் சாதனையாளர்களுக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது.  அந்த வகையில் அன்றிலிருந்து இன்று வரை டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோக்களின் பட்டியல்.

 

1 /7

எம்.ஜி.ராமச்சந்திரன் :  தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தமிழ்நாட்டில் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்தவர் எம்ஜிஆர்., இவரின் நடிப்பு திறமையை போற்றும் வகையில் 1974ம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

2 /7

சிவாஜி கணேசன் :  தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை கொண்டாடும் வகையில் 1986ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடிகர் சிவாஜி கணேசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

3 /7

கமல்ஹாசன் :  தனது திறமையான நடிப்பால் உலகநாயகன் என்று மக்களால் போற்றப்படும் கமலஹாசன் இரண்டு முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.  2005ல் சத்யபாமா பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை பெற்றவர் 2019ல் கலைத்துறையில் 60 ஆண்டுகாலம் வெற்றியுடன் பயணம் செய்ததன் மூலம் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. 

4 /7

விஜயகாந்த் :  நடிப்பால் மக்கள் மனதை வென்றது மட்டுமல்லாது, தனது ரியல் வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் குணத்தால் போற்றப்படுபவர் விஜயகாந்த்.  இவரின் இந்த உயரிய குணத்தை போற்றும் வகையில்  2011ம் ஆண்டு ப்ளோரிடாவில் உள்ள சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

5 /7

விக்ரம் :  எவ்வளவு கடினமான கதாபாத்திரையும், எளிதில் ஏற்று நடிப்பவர் விக்ரம்.  இவரின் திறமைக்கு சிறப்பு செய்யும் வகையில் 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

6 /7

விஜய் :  தனது எதார்த்தமான நடிப்பாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்கள் கூட்டத்தை அசையாமல் வைத்திருப்பவர் தளபதி விஜய். திரைத்துறையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருக்கும் இவரை கௌரவிக்கும் விதமாக 2007ம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தளபதி விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.

7 /7

சிலம்பரசன் :  தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தனது கடின உழைப்பால் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.  நடிப்பு மட்டுமல்லாது பாடலாசிரியராகவும், பாடகராகவும் , இயக்குனராகவும் பன்முக தன்மையோடு சிறந்து விளங்குகிறார்.  இதனை போற்றும் வகையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 11ம் தேதி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கபோவதாக அறிவித்துள்ளது.