பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் எப்போது?

Tamil Nadu Government Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா?  என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் (Tamil Nadu Government Pongal Gift) கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1 /7

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழ் மாதமான தை முதல் நாள் பொங்கல் விழா. இந்த தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு (Tamil Nadu Government Pongal Gift) வழங்கும்.

2 /7

ரேஷன் கடையில் பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாகவும், தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாகவும் பொங்கல் விழாவை கொண்டாடவும் வழங்கப்படும். கொரோனா காலத்துக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டு வருகிறது.  

3 /7

இந்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு ரொக்கம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா? என்ற கேள்வி பரவலாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது

4 /7

இந்த தொகை மூலம் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அப்படியிருக்கையில் இந்த பெண்கள் எல்லோரும் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அதனால் தைப்பொங்கல் பண்டிகையின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் பெற வாய்ப்புள்ளது

5 /7

ஆனால் ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் கொடுக்குமா? என மக்கள் மத்தியிலேயே ஒரு கேள்வி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்தாலும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் குறித்த தகவல் அரசு தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை

6 /7

அதனால் இந்த முறை வெறும் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி சேலை மட்டுமே கிடைக்கும் எனவும் பேசிக் கொள்கின்றனர். அதேநேரத்தில் அரசு எப்போதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவது குறித்து ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தான் அறிவிக்கும். அதனால் மக்கள் ஜனவரி முதல் வாரம் வரை காத்திருந்தால் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிந்து கொள்ளலாம்

7 /7

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்புடன் சேர்த்து வெல்லமும் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு வழங்கும் பொங்கல் பரிசு எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் சென்று சேர வேண்டும் என்பதில் திட்டங்களை அதிகாரிகள் வகுத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மூன்று வாரங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்