இந்த 3 வங்கதேச வீரர்கள்... இந்திய அணி ஜாக்கிரதையாக இருக்கணும் - இல்லனா சிக்கல் தான்!

IND vs BAN Test Series: சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இந்த 3 வங்கதேச வீரர்களிடம் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

வங்கதேச அணி (Team Bangladesh) இன்னும் அதன் ஸ்குவாடை அறிவிக்காவிட்டாலும் கூட பாகிஸ்தான் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்களே இங்கும் விளையாடுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

1 /8

இந்தியா - வங்கதேசம் அணிகள் (IND vs BAN) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளன. இந்த டெஸ்ட் தொடர் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.   

2 /8

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (IND vs BAN 1st Test Match) வரும் செப். 19ஆம் தேதி செனை்னையில் தொடங்குகிறது. அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப். 27ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.   

3 /8

இந்திய அணி (Team India) இந்த தொடரின் முதல் போட்டிக்கான 16 வீரர்கள் அடங்கிய ஸ்குவாடை அறிவித்துள்ளது. எனவே, இரண்டாவது போட்டிக்கு முன் நிச்சயம் ஸ்குவாடில் மாற்றம் இருக்கலாம். வங்கதேச அணி (Team Bangladesh) அதன் ஸ்குவாடை அறிவிக்காவிட்டாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியவர்களே பெரும்பாலும் இதில் இடம்பெறுவார்கள்.   

4 /8

வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, 2-0 என கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையுடன் இந்தியாவுக்கு வர இருக்கிறது. இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல என்றாலும் வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. போட்டிக்கு நான்கு நாள்களுக்கு முன்னரே (செப். 15) வங்கதேச அணி சென்னை வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

5 /8

அப்படியிருக்கையில், டெஸ்ட் தொடரில் இந்த 3 வங்கதேச வீரர்கள் பெரும் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டால் நிச்சயம் இந்திய அணிக்கு பிரச்னைதான். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.   

6 /8

நஹித் ராணா: சராசரியாக 140-148 வேகத்தில் பந்துவீசும் நஹித் ராணா (Nahid Rana) இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுப்பார். புது பந்திலும், பந்து ரிவர்ஸ் ஆகும்போதும் இவரை சமாளிப்பது நிச்சயம் கடினம்தான். சென்னை சேப்பாக்கத்தில் பவுண்ஸ் இருக்கும் என்பது இவருக்கு பிளஸ். புஜாரா, ரஹானே உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாதது இவருக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.      

7 /8

மெஹிதி ஹசன் மிராஸ்: பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மெஹிதி ஹசன் மிராஸ்தான் (Mehidy Hasan Miraz). சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு அதிகமாக கைக்கொடுக்கும் என்பதால் இவரிடம் இந்திய பேட்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரிலேயே இடதுகை ஸ்பின்னர்களிடம் இந்தியா அதிக விக்கெட்டுகளை இழந்தது. எனவே, இவரிடம் இருந்து விக்கெட்டை தற்காத்துக்கொள்வது அவசியமாகும். சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் இவரிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.   

8 /8

லிட்டன் தாஸ்: லோயர் ஆர்டர் பேட்டராக டெஸ்டில் களமிறங்கும் லிட்டன் தாஸ் (Litton Das), அணியை எந்த சூழலிலும் தாங்கிப்பிடிக்கும் வல்லமை கொண்டவர். பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசத்தை இவரும், மெஹிதி ஹாசன் மிராஸ் ஆகியோர்தான் மீட்டெடுத்தனர். அந்த இன்னிங்ஸில் 138 ரன்களை லிட்டன் தாஸ் குவித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. இந்த 3 பேர் மட்டுமின்றி அனுபவ வீரர்களான ஷகிப் அல் ஹாசன் (Shakib Al Hasan) மற்றும் முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) ஆகியோரிடமும் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்.