உங்கள் கண் பார்வையை அதிகரிக்க இந்த 8 பொருட்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் உங்களின் கண்களில் ஏதேனும் பார்வைக்குறையோ அல்லது மங்கலானப் பார்வை இருப்பவர்கள் இதைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.இயற்கையான உணவுப் பொருடகள் மட்டுமே நல்ல மாற்றங்களை தங்களுக்குள் கொண்டுவர நேரிடும்.மேலும் இதுபோன்றப் பிரச்சனை உள்ளவர்கள் தவறமால் பின்வரும் முறையில் சாப்பிட்டு வந்தால் கண்ப் பார்வை அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது.இதுக்குறித்து மேலும் அறிவோம்.
healthy eyesight foods :கண் பார்வையை தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான எட்டு உணவுப் பொருட்கள்.இதை சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.
முட்டை : நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டை சாப்பிட வேண்டும். முட்டையில் உள்ள மஞ்சள் கரு உங்களின் கண் பார்வையின் தரம் மற்றும் கண் பராமரிப்பிற்கு உதவும். முட்டை உங்கள் கண்களில் உள்ள கண்புரை போன்றவற்றை தடுக்க உதவியாக இருக்கும். மேலும் உங்கள் கண் தொடர்பான நோய்களைத் தடுத்து கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் எனக் கூறுகின்றனர்.
இனிப்பு உருளைக்கிழங்கு : இதில் பீட்டா கரோட்டின் உள்ளது.இது உடலில் வைட்டமின் ஏ வாக எடுத்துக்கொள்ளும் மற்றும் வைட்டமின் ஏ கண் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும் எனக் கூறுகின்றனர்.
கேரட்: இதில் வைட்டமின் பீட்டா கரோட்டின் இருக்கிறது.இது நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றும்.மேலும் கண் குருட்டுபார்வையாக இருப்பதற்கு முக்கியக் காரணம் வைட்டம் ஏ குறைவாக இருக்கும். இதனை தவிர்க்க கேரட் சாப்பிடுவது முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறுகின்றனர்.
பச்சை கீரை மற்றும் காய்கறிகள் : இதில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது.இது நம் கண்களில் தோன்றும் கண்புரை உள்ளிட்ட நீண்ட நாள் கண் நோய் அபாயத்தைக் குறைக்க உதவிப்புரிகிறது எனக் கூறப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள் : திராட்சைப்பழங்கள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நம் கண்களில் இருக்கும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது எனக் கூறப்படுகிறது.
பருப்பு வகைப் பொருட்கள்: உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் கண்களின் நரம்பு வலுவடையும்,மேலும் கண்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
நட்ஸ் : சாப்பிடுவதால் உங்களின் கண்கள் பார்வை சக்தியை அதிகரிக்க செய்யும்,மேலும் ஒரே பார்வையைத் தக்க வைக்க உதவுகிறது என்றுக் கூறுகின்றனர்.
மீன்: கண்களுக்கு பார்வையை அதிகரிக்க உதவும் ஒருவித உணவில் இதுவும் ஒன்று.பெரும்பாலும் சிலருக்கு மீன் சாப்பிட பிடிக்காது.குறிப்பாக சில ஆண்கள் மீன் சாப்பிட விரும்புவதில்லை,ஆனால் மீனில் omega 3 இருப்பதால் கண் பார்வையை தெளிவாக்கும்,மங்கலானப் பார்வையை சரிசெய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.