Insta-வில் 90,000 followers, social media-வில் செம பாப்புலர், இதுதான் யானா பூனை

பல விஷயங்கள் உலகில் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இயற்கையின் படைப்புகள் பல நம்மை அதிசயிக்க வைக்கின்றன. 

அப்படிப்பட்ட ஒரு அதிசய படைப்பைப் பற்றிதான் நாம் இன்று காணப்போகிறோம். 

1 /5

யானா என்ற இந்த பூனை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பிரபலமாக உள்ளது. என்ன காரணம் என்பது இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த பூனையின் முகம் பாதி கருப்பு நிறமாகவும் பாதி பழுப்பு நிறமாகவும் இருப்பது இந்த பூனையின் சிறப்பம்சமாகும்.

2 /5

இந்த பூனை மற்ற பூனைகளிடமிருந்து வேறுபடுவதற்கு இதுவே காரணம். அதே நேரத்தில், யானா பூனையின் அழகுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். யானாவின் படங்கள் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. யானாவின் படத்தைப் பார்க்க ​​ஒரே பூனைக்கு இரண்டு வெவ்வேறு வாய்கள் இருப்பதாகத் தெரிகிறது.

3 /5

சமூக ஊடகங்களின் இன்ஸ்டா ப்ளாட்ஃபார்மில், யானாவுக்கு ஒரு அகௌண்ட் உள்ளது. அதில் யானாவுக்கு சுமார் 90 ஆயிரம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

4 /5

யானா பூனையின் பழைய உரிமையாளர், கிரேக்க கடவுளான ஜானஸின் நினைவாக இந்த பூனைக்கு யானா என பெயரிட்டார். அந்த தெய்வத்திற்கும் இரண்டு முகங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது - ஒரு முகம் எதிர்காலத்தை நோக்கியும், ஒன்று கடந்த காலத்தை நோக்கியும் இருந்ததாகத் தெரிகிறது.

5 /5

யானாவுக்கு முன்பு, வீனஸ் என்ற பூனையும் மிகவும் பிரபலமானது. வீனசின் முகம் பாதி கருப்பு நிறமாகவும் பாதி ஆரஞ்சு நிறமாகவும் இருந்தது.