Headache Remedies Tamil: பலருக்கு தாங்க முடியாத அளவிற்கு தலைவலி வரும். இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்.
Headaches Causes, Remedies and Prevention: நம் அனைவருக்கும் காய்ச்சல், சளி வருவது போல அடிக்கடி தலைவலி பிரச்சனையும் வருவதுண்டு. தலையையே பிளக்கும் அளவிற்கு பலருக்கு தலை வலி வருவதுண்டு. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதும் உண்டு. அடிக்கடி இது போன்ற தலைவலிகள் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி நடப்பது அவசியம். சில சமயங்களில் அடிக்கடி வரும் தலைவலிகளை சமாளிக்க சில எளிய வலிகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலர், இதற்காக மருத்துவர்களை அணுகி சரியான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வர். ஆனால் சிறிதளவு தாங்கிக்கொள்ள கூடிய, ஆனால் அன்றாட வேலைகளை செய்ய விடாத தலைவலிகளின் வகைகளும் இருக்கின்றன. இவற்றில் இருந்து விடுபட, ஈசியான டிப்ஸ் இதோ.
மைக்ரேன் தலைவலியுடன் இருப்பவர்களை வைத்து 2011ஆம் ஆண்டு ஒரு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், அவர்கள் வெளிச்சத்தில் இல்லாமல் இருண்ட அறையில் உறங்குவதால் அந்த தலைவலி குறைந்திருப்பதாக ஆய்வரிக்கைகள் கூறுகின்றன. எனவே, நீங்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையால் பாதிக்கப்படுபவராக இருந்தா, நன்கு இருட்டான அறையில் உறங்கி பாருங்கள்.
பலருக்கு தலைவலி ஏற்படும் சமயங்களில் கோல்ட் பேக்ஸ், அல்லது ஹாட் பேக்ஸ்கள தலையில் வைப்பதால் அதிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இது, இதனால் தலைவலி ஏற்படும் நரம்புகளுக்கு வலியில் இருந்து வேறு விடுபடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதாகவும் சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் தலைவலி ஏற்படும் சமயங்களில் தலையில் அல்லது கழுத்தின் பின்பகுதியில் இந்த கம்ரஸர்களை வைத்துக்கொள்ளலாம்.
தலைவலி ஏற்படுவதற்கு, நாம் சரியாக தண்ணீர் குடிக்காததும் பெரிய காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, முடிந்த அளவு ஒரு நாளை 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக்கொள்ளவும். தண்ணீர் குடிப்பது பிடிக்கவில்லை என்றால் சமயங்களில் பழ ஜூஸ், அல்லது பழமாகவே கூடி குடிக்கலாம், சாப்பிடலாம்.
தலைவலியில் இருந்து விடுபட, இன்னும் சிலர் பரிந்துரைக்கும் அல்லது உபயோகிக்கும் முறை மசாஜ். ஆனால், இந்த மசாஜ் முறையால் அனைவருக்கும் தலைவலி குணமாகி விடும் என கூறிவிட முடியாது. இது, உடனடி நிவாரணியாக சிலருக்கு உபயோகம் ஆகலாமே தவிர, அனைவருக்கும் இது நிவாரணம் தரும் என கூறுவதற்கு சரியான சான்றுகள் இல்லை.
2015ஆம் ஆண்டு ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் 10 பேரில் 8 பேர் தியானம், யோகா போன்ற பயிற்சிகளால் தலைவலியில் இருந்து விடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் சிறந்த தீர்வாக உள்ளது. பலருக்கு மன நலன் கோளாறு காரணமாக தலைவலி ஏற்படலாம். அதை குணப்படுத்த தியானம் உதவும்.
காய்ச்சல், சளியினால் தலைவலி ஏற்பட்டால் அவை சில நாட்களுக்கும் சரியாகிவிடும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், காய்ச்சல் அல்லாமல் அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் கண்டிப்பாக அது குறித்த மருத்துவரை பார்த்து உடனடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.