இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 10 வீரர்களை இங்கு காணலாம். இதில் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மயங்க் யாதவ் தற்போது அதிவேகமாக பந்துவீசி வரும் நிலையில், அவர்தான் முதலிடம் என பல நினைப்பார்கள். அது தவறு. இந்நிலையில், இந்த டாப் 10 வீரர்களை பார்ப்பதன் மூலம் மயங்க் யாதவ் எந்த இடத்தில் இருக்கிறார், முதலிடத்தில் யார் இருக்கிறார் என்பது குறித்து இதில் காணலாம்.
10. உமேஷ் யாதவ்: இவர் மணிக்கு 152.2 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
9. வருண் ஆரோன்: இவர் மணிக்கு 152.5 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
8. இஷாந்த் சர்மா: இவர் மணிக்கு 152.6 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
7. நவ்தீப் சைனி: இவர் மணிக்கு 152.85 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
6. ஜஸ்பிரித் பும்ரா: இவர் மணிக்கு 153.26 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
5. முகமது ஷமி: இவர் மணிக்கு 153.3 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
4. இர்பான் பதான்: இவர் மணிக்கு 153.7 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
3. ஜவஹல் ஸ்ரீநாத்: இவர் மணிக்கு 154.5 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
2. மயங்க் யாதவ்: இவர் மணிக்கு 156.7 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார் - ஐபிஎல் 2024
1. உம்ரான் மாலிக்: இவர் மணிக்கு 157 கி.மீ., வேகத்தில் பந்துவீசியுள்ளார் - ஐபிஎல் 2022