அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நேற்றுடன் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டு கமலுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி நேற்றுடன் தொடங்கி உள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். இந்த வருடம் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
ரியாலிட்டி ஷோ உலகில் பிக்பாஸ் முக்கியமான ஒன்றாக உள்ளது.கடந்த 7 வருடமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அதிக பணிச்சுமை காரணமாக பிக்பாஸில் இருந்து விலகி உள்ளார்.
விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். எனவே அவர் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
கமல்ஹாசன் தனது தனித்துவமான வர்ணனை மூலமும், நகைச்சுவையான கருத்துக்கள் மூலமும், புத்தக பரிந்துரை மூலமும் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்தில் வைத்து இருந்தார்.
கமலுக்கு பிறகு சிம்பு, அரவிந்த் சுவாமி, பிரகாஷ் ராஜ் போன்ற பெயர்கள் அடிபட்டாலும், இறுதியில் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் கடந்த சீசனை தொகுத்து வழங்க ரூ .130 கோடி சம்பளம் பெற்றார் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் சம்பளம் குறைவு என்றாலும் இந்த சீசனை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.