Chennai Chepauk Test Matches Stats: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிகபட்ச ரன்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். இங்கு பல ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் இங்குதான் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் செப். 19ஆம் தேதி இந்தியா - வங்கதேசம் (IND vs BAN 1st Test) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chennai Chepauk Stadium) நடைபெற இருக்கிறது. அந்த வகையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்களை குவித்த டாப் 7 பேட்டர்களை இங்கு காணலாம்.
டீன் ஜோன்ஸ் (Dean Jones): மறைந்த ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் 1986ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 330 பந்துகளுக்கு 210 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடிக்கிறார்.
ஜோ ரூட் (Joe Root): 2021ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் 377 பந்துகளுக்கு 218 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடிக்கிறார்.
குண்டப்பா விஸ்வநாத் (Gundappa Viswanath): 1982ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் குண்டப்பா விஸ்வநாத் () 374 பந்துகளில் 222 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.
எம்எஸ் தோனி (MS Dhoni): 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி 265 பந்துகளில் 224 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடிக்கிறார்.
சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar): 1983ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி ஓப்பனர் சுனில் கவாஸ்கர் 425 பந்துகளில் 236 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடிக்கிறார்.
கருண் நாயர் (Karun Nair): 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் 381 ரன்களுக்கு 303 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடிக்கிறார்.
வீரேந்திர சேவாக் (Virender Sehwag): இவர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார். 2008ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 304 பந்துகளில் 319 ரன்களை சேவாக் அடித்திருந்தார். இதுதான் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.