விக்னேஷ் சிவன் :இயக்குனர்,எழுத்தாளர் என்பதை விட ஒரு மாபெரும் கவிஞர் என்றேக் கூறலாம்.மனம் கூறுவதை பாடல் வரிகளாக எழுதும் அற்புதமானத் திறமை இவரிடம் உள்ளது.சாதித்த அனைத்தையும் ஒரே பாடலில் அமையும் அளவிற்கு இவரது பாடல் வரிகள் அமைந்துள்ளது.மேலும் இதுக் குறித்த தகவல் இங்கே !
விக்னேஷ் சிவன்: நயன்தாராவின் கணவர் மற்றும் இயக்குநர்,எழுத்தாளார் என பலவற்றில் ஹீரோவாக இருக்கும் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள் அனைத்தும் அர்த்தமுள்ள வரிகள்,பாடல் கேட்பவர் மனதிற்கு பிடிக்கும் அளவிற்கு இவரின் பாடல் வரிகள் உள்ளது.மேலும் இவர் எழுதியப் பாடல்களை இங்குப் பார்போம்.
விக்னேஷ் சிவன்: நானும் ரௌடிதான் படத்தின் அனைத்து பாடல்களும் இவர் எழுதியது என்று யாருக்கெல்லாம் தெரியும் ? அனிருத் பாடின பாடல்கள் என்று அனைவருக்கும் தெரியும்,ஆனால் இந்த பாடலின் அனைத்து வரிகளும் இவர் எழுதியது.
வணக்கம் சென்னை படத்தில் எங்கடி பொறந்த பாடல் மற்றும் சென்னையின் சிறப்பைப் போற்றும் விதத்தில் சேன்ஸே இல்ல பாடல்கள் போன்றவை பல மில்லியன் பார்வையாளர்கள் கேட்ட பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சிவக்கார்த்திகேயன் நடித்த டான் ,ரெமோ, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படத்தில் ‘சிரிக்காதே,தமிழ்செல்வி,சென்ஜிட்டாலே, ரெமோ நீ காதலன்,பே,எங்க அண்ணன்’ஆகியப் பாடல்கள் அனைத்தும் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள்,மேலும் இந்த பாடல்கள் அனைத்துமே டாப் ஹிட் பாடல்கள்.
அஜித் நடித்த வலிமை,என்னை அறிந்தால் படத்தில் ‘ நாங்க வேற மாறி,அம்மா பாடல்,அத்தாரு அத்தாரு போன்ற பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதியப் பாடல்கள்.அஜித்தின் டாப் ஹிட்டில் இதுவும் ஒன்று.
சூர்யா நடித்த தானா சேர்ந்தக்கூட்டம்,என் ஜி கே,எதற்கும் துணிந்தவன் போன்றப் படத்தில் ‘திமிரனும்டா,நானா தானா,பீலா பீலா,சொடக்குமேல,வாடா தம்பி ஆகியப் பாடல்கள் அனைத்தும் விக்னேஷ் சிவனின் வரிகள்.
விஜய்சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல்,விக்ரம் வேதா போன்ற படத்தின் ‘ திப்பம் திப்பம், நான் பிழை,டூ டூ டூ,ரெண்டு காதல்,அழத் தோனுதே,கருப்பு வெள்ளை ஆகியப் பாடல்கள் அனைத்தும் விக்னேஷ் சிவனின் அழகிய வரிகளே..
விஜய் நடித்த மாஸ்டர்,படத்தில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’,’‘க்வைட் பண்ணுடா’, மற்றும் தனுஷ் நடித்த மாரி படத்தில்‘தப்பாதான் தெரியும்’ பாடல் ஆகியவை விக்னேஷ் சிவன் எழுதிய அற்புதமான மாஸான வரிகள்.
நயன்தாராவின் நெற்றிகண் படத்தின் பாடல்கள் மற்றும் அனிருத் பாடிய எனக்கென யாரும் இல்லையே பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதிய வரிகள்.அதுமட்டுமில்லாமல் அனைத்து வரிகளும் வேற லெவல் பாடல்கள்..
ரஜினியின் ஜெயிலர் படத்தில் ‘ ரத்தமாரே’,எல் ஜி கே படத்தில் ‘திமிரு காட்டாதடி’,தாராள பிரபு படத்தில் ‘பாக்கு வெத்தல’ பாடல்கள்,சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் ‘ஷோக்கலி’ யாக்கை படத்தின் ‘சொல்லி தொலையன்மா’ பாடல் ஆகிய பாடல்கள் அனைத்தும் விக்னேஷ் சிவன் எழுதிய வரிகள்.இந்த பாடல்கள் அனைத்தும் நல்ல அர்த்தமுள்ள வரிகள் மீண்டும் பாடல் கேட்கத் தூண்டும், உற்சாகப்படுத்தும்.