Vijay Sethupathi Next Movie: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு வெளியான மகாராஜா படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியானது. தமிழகத்தை தாண்டி சீனா வரை இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான விடுதலை 2 படமும் விஜய் சேதுபதிக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு முக்கியமான நடிகராக விஜய் சேதுபதி மாறி உள்ளார்.
தற்போது இரண்டு படங்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸில் நடைபெறும் விஜய் சேதுபதி, புதிய படங்களில் நடிப்பதற்கும் கதைகளை கேட்டு வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சிறிய படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.