Phone Charger Tech Tips : ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது பேசுவதற்காக அல்லது தகவல் தொடர்புக்காக என்ற நிலை மாறிய நிலையில், போனின் பேட்டரி சார்ஜிங் தொடர்பான முக்கியத் தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்...
ஃபோன் முழுவதுமாக சார்ஜ் ஆன பிறகும் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? இந்த கேள்விக்கான பதில் இந்த கட்டுரை....
போனில் சார்ஜ் போகாமல் இருக்க ஸ்மார்ட்போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு, சார்ஜரில் போட்ட போனை நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடுவதும் சகஜமாகிவிட்டது. 100% சார்ஜ் ஆன பிறகும் அதை சார்ஜருடன் இணைப்பது உங்கள் போனின் பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஓவர்சார்ஜிங், ஃபோன் பேட்டரியில் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஆனால் அவ்வாறு செய்வது தொலைபேசியின் பேட்டரி ஆயுளை பாதிக்கிறது
சார்ஜ் முழுமையாக ஆன பிறகும், ஃபோனை சார்ஜிங்கில் வைத்திருப்பதால், ஃபோன் சூடாகும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, அது ஒரு பேட்டரி சுழற்சி என்படுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் குறைக்கலாம்.
ஸ்மார்ட்போன் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்வது நல்லது. இது பேட்டரி ஆயுளை நன்றாக வைத்திருக்கிறது. மேலும், தொலைபேசியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்ய விடாதீர்கள். பேட்டரி 20% ஆக இருக்கும்போது, அதை சார்ஜிங்கில் வைக்கவும்.
வெப்பமான இடத்தில் வைத்து ஃபோனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து போனை சார்ஜ் செய்வதையும் தவிர்க்கவும்.