Planets And Its Traits : நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் கிரகங்களின் நிலை, இயக்கம், அவர்களின் சேர்க்கை பார்வை என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன...
ஒன்பது நவகிரகங்களையும் சுபர் அசுபர் என இரு வகையாக பிரித்துள்ளனர். கிரகங்களின் தன்மை, நிலை அவற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அவற்றின் சுப மற்றும் அசுபத்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்..
ஒன்பது நவகிரகங்களில், சூரியனே முதன்மையானவர். சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர், ராகு, கேது என மொத்தம் ஒன்பது நவகிரகங்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிக்கப்படுகிறது. இவற்றில் சுபர் யார், அசுப கிரகம் எது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
நவகிரகங்களில் முதன்மை கிரகமாக இருந்தாலும் சூரியன் அசுபர் தான், ஆனால் அவர் அரை பாவ கிரகமாவார்.
வளர் பிறை சந்திரன் மட்டுமே, முழு சுபர் ஆவார். தேய்பிறையில் சந்திரன் அசுபர் ஆவார்.
செவ்வாய் கிரகம் அசுப கிரகமாகும், செவ்வாய் முக்கால் பாவ கிரகம் ஆகும், முழு பாவ கிரகம் அல்ல...
புதனை சுபகிரகம் என்று சொன்னாலும், அவர் முழு சுபர் அல்ல. பாவிகளோடு அதாவது பாவகிரகங்களோடு சேராமல், சுக்கிரனோடும் குருவோடும் சேர்ந்த புதன், தனித்த புதனை விட அதிக சுப வலிமை உடையவர்.
நவ கிரகங்களில் குரு மட்டுமே முழு சுபர் ஆவார்
சுக்கிரன் முக்கால் சுபர்
சனி பாவ கிரகங்களில் ஒருவர், சனீஸ்வரர் முழு பாவ கிரகம் ஆவார்
ராகுவும், கேதுவும் பாவ கிரகங்கள், இவை இரண்டுமே நிழல் கிரகங்களும் கூட...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது