Health Tips: உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை பேணுவது நல்ல விஷயம் என்றாலும், அங்கு எந்த வயதில் சென்றால் சரியாக இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Health Tips In Tamil: முந்தைய காலங்களில் ஒரு ஊரின் மைதானத்திலோ அல்லது பொது இடங்களிலோ உடற்பயிற்சிக்கான சில பொருள்கள் இருக்கும். ஜிம் மிக மிக குறைவு. தற்போது ஜிம்மின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இன்றைய காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் அதிகம் ஜிம் (Gym) செல்வதையும் பார்க்க முடிகிறது.
உடல் எடை குறைப்பது தொடங்கி, தசைகை வலுவாக்குவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம் செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் ஜிம்முக்குச் செல்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், இந்த ஆர்வமிகுதியால் ஒரு சிலர் மிக விரைவாகவே ஜிம்மிற்குச் சென்று ஹெவியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்குகின்றனர். சரியான வயதில் ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதே ஆரோக்கியமானதாகும்.
ஜிம்முக்குச் செல்வது என்பது ஒருவரின் மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை சார்ந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஆனால் நிச்சயம் வயதையும் கருத்தில் வைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் பள்ளி முடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவர் ஜிம்முக்குச் சென்று ஹெவியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது 18-20 வயதில் நீங்கள் ஜிம்முக்குச் செல்லலாம். (Perfect Age For Joining Gym)
இந்த வயதில் உங்களின் உடல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும். எனவே இந்த வயதுக்கு பின்னர் ஜிம்முக்குச் சென்றால் காயங்கள் பெரிதாக ஏற்படாது.
ஜிம் செல்வதற்கு முன் சிறு வயதிலேயே ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான மற்றும் சமமான ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளை உண்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான விஷயங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.