விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது
புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது.
Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது.
Ready for launch! Tide is taking its low-resource detergent solution to space aboard @SpaceX – scheduled for launch at 5:06 a.m. EST on Tuesday, (weather permitting). Read more: https://t.co/Qx8Mf9M8IC pic.twitter.com/IIiinmgoTU
— Procter & Gamble (@ProcterGamble) December 20, 2021
விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது.
அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை.
Stage separation confirmed! The @SpaceX Dragon is now floating freely and flying toward the @Space_Station with science, supplies, and holiday treats aboard for the @NASA_Astronauts. pic.twitter.com/ncOPLLXNgd
— NASA (@NASA) December 21, 2021
அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியாக சலவை சோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சலவை வசதி இல்லாததால், விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுதோறும் 72 கிலோகிராம் (160 பவுண்டுகள்) ஆடைகளை நாசா (NASA) விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறது. எனவே, விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சலவை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சலவை சோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
Also Read | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது
விண்வெளியில் சலவை செய்வதற்கான சோப்பை தயாரிக்க புரோக்டர் & கேம்பிள் நிறுவனத்துடன், நாசா கை கோர்த்துள்ளது. விண்வெளி நிறுவனத்திற்கென சிறப்பாக தயாரிக்கப்படும் சோப்புகளை பயன்படுத்தி செய்யப்படவிருக்கும் பரிசோதனைகள் மூலம் விண்வெளியில் சலவை செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்படலாம்.
விண்வெளி நிலையத்தில் இறுதி கட்ட பரிசோதனை செய்வதற்கான பெரும்பாலான உபகரணங்கள் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளன. மீதமுள்ள பொருட்களும் தற்போது அனுப்பப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசு தொகுப்புடன் அனுப்பப்பட்டுள்ளது.
விண்வெளியில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினால், துணி துவைப்பது அவசியம். தற்போது, பரிசோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் போன்ற நீண்ட பயணங்கள் வெற்றிகரமாக நடைபெற இது உதவியாக இருக்கும்.
ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்