வீழ்வேன் என்று நினைத்தாயோ..பாம்பின் பதற வைக்கும் வைரல் வீடியோ

King Cobra Video: சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ராஜ நாகப்பாம்பு ஜேசிபி மூலம் நசுக்கப்படுவதைக் காணலாம், ஆனால் அதன் பின் நடந்ததை கண்டால் அதிர்ச்சியாடந்து விடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 8, 2023, 11:52 AM IST
  • ஜேசிபியால் நசுக்கப்பட்ட நாகப்பாம்பு.
  • அதிர வைக்கும் வீடியோ.
  • கோபமான கிங் கோப்ராவின் வீடியோ.
வீழ்வேன் என்று நினைத்தாயோ..பாம்பின் பதற வைக்கும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித வினோதமான விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சமீப காலமாக விலங்குகளின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்தவகையில் இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வைரலாகி வரும் வீடியோ கொடூரமான நாகப்பாம்பை தொடர்பானது. இதில் பெரிய ஜேசிபி மூலம் தாக்கப்படும் கிங் கோப்ரா தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

ஜேசிபி மூலம் தாக்கப்பட்ட நாகப்பாம்பு
தற்போது  வெளியான வீடியோவில், ஜேசிபி மூலம் ஒருவர் தொடர்ந்து கிங் கோப்ரா பாம்பை  தாக்குவதை நீங்கள் காணலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அந்த நாகப்பாம்பு தப்பி தப்பி அங்கிருந்து அதிசயமாக எழுந்து நிற்கிறது. சில நொடிகள் கொண்ட வீடியோவில், அரச நாகப்பாம்பு முழு பலத்துடன் ஜேசிபியால் தாக்கப்பட்டதையும், நசுக்குவதையும், அதன் முழு உடலையும் பல முறை தாக்குவதையும் காணலாம். ஆனால் ஜேசிபி கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தவுடன், ராஜ நாகப்பாம்பு உடனடியாக அங்கிருந்து ஆக்ரோஷமாக தப்பி செல்ல முயல்கிறது. இதன் போது அதன் உச்சகட்ட கோபத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

அதிர்ச்சி வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amrit969666 (@amrit96966)

கோபமான கிங் கோப்ராவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ amrit96966 என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தாகத்தால் தவித்த மானை... நெருங்கிய முதலை - கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News