வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
நண்பரிடம் குட்-பை சொல்வது எளிதான காரியம் அல்ல. அதுவும் அந்த நண்பரை இனி காணவே முடியாது என்றால், அந்த சோகத்தை சொல்லால் குறிப்பிட முடியாது. அதுவும் அந்த நண்பன் அழகாக வாலை ஆட்டும், குறும்பாக பார்க்கும், இரு பஞ்சு போன்ற காதுகளைக் கொண்ட ஒரு நாயாக இருந்தால் என்ன சொல்ல!! ஆனால், நாம் இங்கு மனிதனுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி அல்ல, நாய்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள நட்பைப் பற்றி காணவுள்ளோம்.
நீங்கள் இங்கு காணப்போகும் வீடியோ உங்களை கண்டிப்பாக கலங்க வைக்கும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்த ஒரு நாய்க்கு பிரியா விடை அளிப்பதை காண முடிகிறது.
क्या ये ‘जानवर’ हैं ? pic.twitter.com/4VIxUKyNYI
— Awanish Sharan (@AwanishSharan) February 28, 2022
இதில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது. தங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்காமல் போகவே அவர்களே தங்களது தோழனுக்கு ஒரு கண்ணியமான பிரியாவிடை கொடுக்க வாயால் தரையிலிருந்து மணலை இறந்த நாயின் உடல் மீது தள்ளி விட்டு உடலை மணலால் மூடுகின்றனர்.
வைரலாகும் இந்த வீடியோவில், ஒரு நாய் கூட்டம் தங்கள் நண்பரை இழந்து வருந்துவதையும், அந்த நாய்க்கு சரியான முறையில் பிரியாவிடை கொடுக்காமல் அங்கிருந்து செல்ல விரும்பவில்லை என்பதையும் காண முடிகின்றது. அனைத்து நாய்களும் ஒன்று கூடி, தங்கள் கால்கள் மற்றும் வாயை பயன்படுத்தி இறந்த நாயின் உடல் மீது மண்ணை தள்ளி சடலத்தை புதைக்க முயற்சிக்கின்றன.
இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் பகிர்ந்துள்ளார். இதுவரை 170 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அவர் இந்த வீடியோவுக்கு , “இவை விலங்குகள்தானா” என தலைபிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஜிகிரி தோஸ்து..! இரண்டு நாய்க்குட்டிகளின் பாசப்பிணைப்பு வீடியோ!
இந்த வீடியோ நம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தினாலும், மனிதர்கள் இன்னும் போரில் ஈடுபட்டு உயிர்களை அழிக்க முயன்றுகொண்டிருக்கும் வேளையில், இந்த விலங்குகள் தன்னலமின்றி ஒன்றொக்கொன்று பாசமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது.
"விலங்குகள் குட்டி தேவதைகள். எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்க இவை பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை கோபப்படுவதில்லை. தேவையற்ற சண்டைகளில் ஈடுபடுவதில்லை. மனிதர்களுக்கும் இவை உதவியாக இருக்கின்றன” என்று ஒரு ட்விட்டர் பயனர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார்.
“பொதுவாக நாய்கள் தங்கள் முன்னங்கால்களால் மண்ணைத் தோண்டும். அவை இதற்கு தங்கள் கன்னம்/முகத்தையும் பயன்படுத்துவது, பிரிந்து போன தங்கள் தோழன் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது. இது உண்மையான மனிதாபிமானம்.” என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
நாய்களின் நட்பையும் நேசத்தையும் எடுத்துக்காட்டும் இந்த வீடியோ அனைவரையும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளதோடு, உணர்வுப்பூர்வமாக கலங்கவும் வைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR