Car Fire Viral Video: தினமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாவது வழக்கம்தான். அது நடிகர், நடிகைகளில் வீடியோவாக இருக்கலாம், விபத்து வீடியோவாக இருக்கலாம், மிருகங்களின் வீடியோவாக இருக்கலாம், நெட்டிசன்களில் கவனத்தை கவர்ந்த வீடியோக்கள் அனைத்தும் தீயாய் பரவும். ஒவ்வொருவருக்கும் அந்த வீடியோ சார்ந்த தனித்தனி கருத்துகள் இருந்தாலும் அதனை தங்களின் பக்கத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த வீடியோவை இன்னும் அதிகமானோருக்கு சேர்க்கின்றனர். அப்படியிருக்க எந்த வீடியோ எப்போது வைரலாகும் என யாராலுமே கணிக்க முடியாது. இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட வீடியோ தற்போது திடீரென வைரலாவதையும் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று X, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. ஆளில்லாத கார் ஒன்று பயங்கரமாக தீப்பற்றி எரியும் அந்த வீடியோ பார்ப்போரை திகைக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் சோடலா சப்ஸி மண்டி என்ற பகுதயின் மேம்பாலம் ஒன்றில்தான் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஒட்டுமொத்த காரும் தீப்பற்றி எரியும் காட்சிகள் சம்பவ இடத்தில் பொதுமக்களால் செல்போன் மூலம் எடுக்கப்பட்டதாகும். இந்த சம்பவம் குறித்த பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
கோஸ்ட் ரைடர் கார்
ஜிதேந்திரா என்பவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது காரில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மேம்பாலத்தில் ஜிதேந்திரா, தீ கார் முழுவதும் பரவுவதை கண்டதுடன் காரை விட்டு இறங்கி தலைத்தெறித்து ஓடத்தொங்கியுள்ளார். தீ கார் முழுவதும் பரவி, கரும்புகையும் வானை நோக்கி எழும்பி உள்ளது. காரில் ஆள் இல்லை என்றாலும் மேம்பாலம் என்பதாலும், ஹேட் பிரேக் வேலை செய்யாததாலும் கார் அப்படியே மிதமான வேகத்தில் நகர்ந்து வந்துகொண்டிருந்தே வந்தது.
மேலும் படிக்க | சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட வெள்ளம்! 50 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
கோஸ்ட் ரைடர் கார் போல தீப்பரவிய நிலையில் கார் சாலையில் நகர்ந்துகொண்டே வந்ததை கண்டு அங்கிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களும் தலைத்தெறிக்க ஓடினார்கள். முன்னாடி நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளும், கார் ஓட்டிகளும் விரைந்து சென்றனர். சிலரோ பைக்கை அப்படியே தள்ளி நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். தீப்பிடித்த காரை கண்டு மக்கள் அச்சத்தில் ஓடியதும் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்வாய்ப்பாக, இந்த தீ விபத்தால் யாரின் உயிருக்கும எந்த ஆபத்தும் நேரவில்லை என கூறப்படுகிறது.
கார் முற்றிலும் நாசம்
பல்வேறு சமூக வலைதள பதிவுகளின்படி அது MG Hector வகை கார் என்றும், ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் இவை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. சற்றே மேடான பகுதிக்கு வந்த உடன் அங்கிருந்த சாலைத் தடுப்பில் மோதி கார் அப்படியே நின்றுவிட்டது. பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. காரின் எஞ்சின் உள்ள முன்பக்கத்தில் இருந்தும் புகை கிளம்பியது அங்கு மேலும் பரபரப்பை உண்டாக்கியது.
A dramatic incident unfolded on Friday evening in Jaipur’s Sodala Sabzi Mandi area when a burning, driverless car ( MG Hector ) caused widespread panic. The car, driven by Jitendra, caught fire due to a suspected short circuit. Upon noticing the flames and smoke, Jitendra quickly… pic.twitter.com/F3jy92wekL
— Prateek Singh (@Prateek34381357) October 13, 2024
22 கோடம் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் எரிந்த தீயை அணைத்தனர். கார் முற்றிலும் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் உறுதிசெய்தார். தற்போது இந்த வீடியோதான் அனைத்தும் பக்கமும் சுற்றலில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | 'அந்த மனசுதாங்க கடவுள்!!': இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ