திருவிழா கொண்டாட்டத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த ஆண் காவலருக்கு, அப்பகுதியை சேர்ந்த ஆண் முத்தம் அளித்துள்ள விவகாரம் தற்போது வைரலாகி வருகின்றது!
தெலுங்கானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொனாலு திருவிழா கொண்டாப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு இளைஞர், திருவிழா பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஆண் காவலை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.
காவல்துறையினரின் அறிக்கை படி, இந்த சம்பத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் 28 வயது மதிக்கத்தக்கவர் எனவும், தனியார் வங்கி ஒன்றியில் பணிபுரிந்து வருகிறான் எனவும் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த நபர் அதிக அளவில் மதுபானம் அருந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Good evening.. pic.twitter.com/jTXrzScEH1
— Tik Tok Tik Tok (@ ) July 29, 2019
இந்நிலையில் இளைஞரின் இந்த அத்துமீறல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில்., கொண்டாட்டங்களுக்கு நடுவில், ஒரு இளைஞர் ஒரு காவல்துறை அதிகாரியைக் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார், அதைத் தொடர்ந்து மற்ற காவலர்கள் உடனடியாக அந்த நபரை ஒதுக்கித் தள்ளி அறைகின்றனர். பின்னர் அவர் மீது புகார் பதியப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப் படுகின்றார்.
பொனாலு என்பது தெலுங்கானாவின் வருடாந்திர திருவிழாவாகும், இந்த திருவிழா மாநிலம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது மக்கள் மகாகலி தேவியை வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.