பரந்து விரிந்த இந்த உலகை, நம் கையில் இருக்கும் சிறிய கை பேசி தற்போது சுருக்கி விட்டது. இதில் பல விஷயங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். பலர் இதனால் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையில் பல வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ பார்க்க நேரிடும். அதில் ஒரு சில வீடியோக்கள், பலரை இரவில் தூங்க விடாமல் கூட செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், அளவில் பெரிய ராஜ நாகம் ஒன்று அதை விட சின்னதாக இருக்கும் பாம்பு ஒன்றை, அது உயிருடன் இருக்கும் போதே அப்படியே விழுங்குகிறது. பாம்பு இன்னோரு பாம்பை சாப்பிடுமா..? இதென்ன ஆசரியம்.
பாம்பு பாம்பை சாப்பிடுமா..?
கொடிய விஷம் கொண்ட ஊர்வன வகைகளாக அறியப்படுபவைதான், பாம்புகள். இதிலும் அதிக விஷமுல்ல, ஆளையே சாய்க்கும் வகைகள் ராஜ நாகம். உலகில் உள்ளவற்றிலேயே அதிக நீளமுள்ள, அதிக விஷமுள்ள பாம்பு வகைகள் இவைதான். இதை ஆசிய கண்டத்தில் மட்டுமே அதிகமாக பார்க்க முடியும். ராஜ நாகங்களில் உள்ள ஒரு சில வகைகள் தங்கள் வகைகளை சேராத பிற நாகங்களையும், பல்லிகளையும் தனக்கு இரையாக ஆக்கிக்கொள்ளுமாம். சமயங்களில் சின்ன சின்ன விலங்குகளன பறவை, முயல் ஆகியவற்றையும் சாப்பிடுமாம். ஒரு முறை சாப்பிட்டாலும் கொழுத்த உணவுகளை மட்டுமே சாப்பிடும் இந்த வகை ராஜ நாகங்கள், அதன் பிறகு எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இரையின்றி உயிர் வாழுமாம்.
மேலும் படிக்க | அட்ராசக்க அச்சச்சோ ஆன கதை: திருமணத்தில் தரமான சம்பவம்.. வைரல் வீடியோ
வைரல் வீடியாே:
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வட்டமடித்து வருகிறது. அதில், ஒரு பெரிய ராஜ நாகம் ஒரு குட்டி நாகத்தை அப்படியே அதுவும், அந்த நாகம் உயிருடன் இருக்கும் போதே விழுங்குகிறது. மயிர்கூச்சரிய வைக்கும் இந்த வீடியோ பலரது தூக்கத்தையும் கெடுக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், “என்னால் இதை தனியாக பார்க்க முடியவில்லை. இது மிகவும் பயமாக உள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், “பாவம் அந்த பாம்புக்கும் பசிக்கும்ல..” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை 7,900 லைக்ஸ்களையும் குவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ