காட்டில் இருக்கும் வேட்டை விலங்குகளின் உணவு என்றால் அது மான் தான். அவை எங்கிருக்கின்றன என்பதை தேடித் தேடி பெரிய விலங்குகள் வேட்டையாடும். சிறுத்தை, புலி மற்றும் சிங்கத்தின் பிராதன உணவே மான் என்றால் மிகையில்லை. ஏனென்றால், வனப்பகுதியில் அதிகமாக மான் தான் இருக்கும். மற்ற விலங்குகளையும் சிறுத்தை வேட்டையாடும் என்றாலும், எளிதான இலக்கு மான் தான்.
மேலும் படிக்க | Viral video: கச்சா பாதாம் பாடலுக்கு அழகாய் நடனமாடும் குட்டி தேவதை!
துரத்திப் பிடிப்பதற்கு சிறுத்தைக்கு ஏதுவாக இருக்கும். மான்கள் வேகமாக ஓடக்கூடியவை என்றாலும், புலிப்பாய்ச்சலுக்கு முன்பு தப்பிக்க இயலாது. மானைவிட இருமடங்கு வேகத்தில் புலி மற்றும் சிறுத்தை ஓடி வரும். அதனால், மான்கள் தப்பிக்க வேண்டும் என்றால், வேகமாக ஓடுவதுடன் லாவகமாக சிந்தித்து துரத்தி வரும் புலியை திசை திருப்பினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் நேரங்களில் மான்கள் இப்படி லாவகமாக செயல்படுவதை கூட நீங்கள் பார்த்திருக்க முடியும்.
— African animal (@africaniml) March 11, 2022
ஆனால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் மான், சிறுத்தை வருவதைப் பார்த்து துளிகூட அஞ்சவில்லை. சிறுத்தை வேட்டையாட வருகிறது என தெரிந்தும் மான் ஜாலியாக புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது, அருகில் வரும் சிறுத்தை, மானை வேட்டையாட முற்படுகிறது. இருந்தபோதும் அதனால் முடியவில்லை. ஏனென்றால், மானுக்கு முன்பு மிகப்பெரிய கம்பிவேலி இருக்கிறது. அதனை சிறுத்தை கவனிக்கவில்லை. வேலி இருக்கும் தைரியத்தில் மான் எந்தவித சலனமும்இன்றி இருக்கிறது. மறுபுறம் மானை வேட்டையாட முடியாத ஏமாற்றத்தில் சிறுத்தை திரும்பிச் செல்கிறது. இந்த வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | எச்சரிக்கையை மீறிய கார் டிரைவர் - சினம் கொண்ட யானை.. என்ன நடந்தது? Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR