Viral Video In India: குழந்தைகள் சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடமே... அடையாளம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இரு... என்பதுதான். யாரென்றே தெரியாத நபர்கள் உணவு கொடுத்தாலோ, அழைத்தாலோ முதலில் பெற்றோர் இடத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறுவார்கள். ஏனென்றால், யார் என்றே தெரியாத நபர்களால் குழந்தைகளுக்கு அதிகம் ஆபத்து ஏற்படுகிறது என்பதால் இதை அடிக்கடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
இதை இந்த குழந்தை தனது நினைவில் வைத்துக்கொண்டேதான் வளரும். பள்ளி, கல்லூரிக்குச் சென்ற பிறகும் யார் என தெரியாதவர்களை நெருங்கவும் அந்த குழந்தைகள் அச்சப்படும். இருந்தாலும், சிலரோ தைரியமாக என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என அச்சமின்றி இருப்பார்கள். அதாவது, பெற்றோர் சிறுவயதில் சொல்லிக்கொடுத்த பாடத்தை ஞாபகத்தில் வைத்திருந்தாலும், தற்போது வளர்ந்துவிட்டதால் அதுகுறித்து சுயமாக முடிவெடுக்கவே பலரும் விரும்புவார்கள்.
பைக் திருட்டு
அப்படி அடையாளம் தெரியாத ஒரு நபரை நம்பிய ஒருவர் தனது பைக்கை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் அவருக்கும் அவரின் பெற்றோர் சிறுவயதில் இதை சொல்லிக் கொடுத்திருப்பார்கள், ஆனால் அடையாளம் தெரியாத அந்த நபர் மேல் பாதிக்கப்பட்டவர் வைத்த நம்பிக்கை நொடியில் தவிடுபொடியானது. இதுகுறித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் அடையாளம் தெரியாத ஒரு சிறுமி, ஒருவரின் பைக்கை நூதன முறையில் திருடிச் சென்றுள்ளார். அந்த பெண் திருடிச் சென்ற வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, வாராணசியின் கபீர் நகரில், 'வழியில் உங்கள் ஸ்கூட்டி குறுக்கே நிற்கிறது... அதை நகர்த்த வேண்டும்' என பள்ளி சீருடை அணிந்து வந்த சிறுமி, பைக்கின் உரிமையாளரிடம் வந்து கேட்டுள்ளார். பள்ளி சீருடை அணிந்து வந்ததால், அந்த சிறுமியை நம்பி அவரும் சாவியை கொடுத்துள்ளார்.
வைரலான சிசிடிவி வீடியோ
அப்பாவி சிறுமி என அவர் நினைத்தது தவறாகிவிட்டது. அந்த பைக் உரிமையாளர் நீண்ட நேரம் சிறுமி வராததை கண்டு அங்கு சென்று பார்த்தபோது பைக்கை திருட்டுப்போனது தெரியவந்தது. அந்த பெண் லாவகமாக அந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. பைக்கின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து திருடிச் சென்ற சிறுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறது.
"@myogiadityanath @CMOfficeUP @dgpup Kindly take urgent action on the theft of my friend Sarika's scooty in Varanasi. Requesting your intervention to resolve this at the earliest. Attaching the newspaper clip for reference. #Varanasi #UPPolice #Help" pic.twitter.com/C9vPr0HwJl
— Tapan (@tapan_s) September 9, 2024
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் பலரும் அடையாளம் தெரியாத நபர்கள் யாரையும் நம்பக் கூடாது என்பது மீண்டும் ஒருமுறை உறைத்துவிட்டது என கமெண்ட் செய்துள்ளனர். எந்த காரணம் கொண்டும் பள்ளி சீருடை அணிந்தாலும் கூட யார் என்ற தெரியாதவர்களை நம்பி எதுவும் செய்யாதீர்கள் என எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அரசு பள்ளிக்குள் பீர் குடிக்கும் மாணவிகள்! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ