டீ அல்லது காபியுடன் ரஸ்க் குடிக்க பலர் விரும்புவார்கள். இன்னும் பலர் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ அதிர்ச்சியை ஊட்டுவதாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, X தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு ரஸ்க் தயாரிக்கும் பேக்டரி வீடியோவில், அந்த குறிப்பிட்ட தொழிற்சாலை சுகாதார நடைமுறைகளை கடைபிடித்ததாக தெரியவில்லை. இதன் விளைவாக, ரஸ்க் சப்பிடுவது குறித்து நீங்களும் ஒருமுறைக்கு இரு முறை யோசிப்பீர்கள்.
வைரலாகும் இந்த வீடியோ அமர் சிரோஹி (foodie_incarnate) என்பவர் எடுத்த வீடியோ ஆகும். இதனை @Ananth_IRAS என்ற பயனர் சமீபத்தில் X தளத்தில் மறுபகிர்வு செய்யப்பட்டது. வைரலாகும் வீடியோவில், ஒரு குழுவினர் ரஸ்க் பிஸ்கட் தயாரிக்கும் வெவ்வேறு காட்சிகளைப் பார்க்கிறோம். அவர்கள் வெறும் கைகளால் மாவைப் பிசைவதை காணலாம். ஒரு காட்டியில் ஒரு தொழிலாளி ரஸ்க் தயாரிக்கும் போது ஒரு கையால் சிகரெட்டைப் பிடிப்பதையும் காணலாம். அவர் புகை பிடித்துக் கொண்டே தனது மற்றொரு கையால் ரஸ்க் தயாரிக்க தேவையான பொருட்களைக் கலக்கிறார். மாவு தயாரானதும், வேலையாட்கள் அதை நீண்ட ரொட்டிகளாக வடிவமைப்பதைப் பார்க்கிறோம். பின்னர் இவை சிறிது நேரம் சுடப்படுகின்றன. பின்னர், அவை துண்டுகளாக வெட்டப்பட்டு மீண்டும் சுடப்படுகின்றன.
வைரலாகும் ரஸ்க் வீடியோவை கீழே காணலாம்:
If this is true, I dread having a toast again! #Food #hygiene pic.twitter.com/VXP9dkFp8A
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) November 20, 2023
மேலும் படிக்க | சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கா... ‘இந்த’ வீடியோவை பார்த்தா இனி தொட மாட்டீங்க!
ரஸ்க் ஆரோக்கியத்திற்கு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்
பொதுவாக ரஸ்க் அதிகம் சாப்பிடுவது குறித்து உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஸ்க் சுவையானது என்றாலும், தினமும் சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ரஸ்க்கை தினமும் உட்கொள்வது உங்கள் குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் செரிமானம் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச்சத்து நன்மைகளும் இல்லை என எச்சரிக்கும் நிபுணர்கள்
ரஸ்க் தயாரிப்பதில் சுத்திகரிக்கப்பட்ட ரவை, கோதுமை மாவு அல்லது மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து உமி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிலிருந்து எடுக்கப்படுகின்றன. எனவே, இதில் நார்ச்சத்து எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். மேலும், ரஸ்கில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுகிறது. நீங்கள் வெறும் 2 ரஸ்க் சாப்பிட்டால் கூட, அது உங்கள் தினசரி சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடும். மேலும், இதில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கபப்ட்ட எண்ணெயின் தரம் இல்லாததாக இருப்பதால் ஊட்டச்சத்து நன்மைகளும் இல்லை எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்.. இனி பானி பூரி வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ