வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு உயர் இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதனையறிந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கருணாநிதி தங்கிருக்கும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். உடனே காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் நலம் பெற வேண்டி பலர் பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும் தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தலைவரான கருணாநிதியை சந்திக்க பலர் மருத்துவமனை வந்தவண்ணம் உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனைக்கு வெளியே பல ஆயிரம் தொண்டர்கள் "எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா" என கோஷம் எழுப்பிய படி காத்திருக்கின்றனர். பலர் கண்ணீர் விட்டு அழுவும் காட்சிகளும் காண முடிந்தது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி மிராக்லின், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியது,
தலைமுறைகள் தாண்டியும் தலைவர் கலைஞரின் புகழ் நிலைத்து நிற்கிறது! @kalaignar89 @mkstalin #TamilPrideKalaignar pic.twitter.com/7uELgYHSmq
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) August 1, 2018
இந்த கடிதம் டாக்டர் மு.கருணாநிதி தாத்தாவுக்கு...
"எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும். அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். எப்பொழுது நீங்கள் நோய்வாய்ப்பட்டிற்களோ, நான் அழுதேன். உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்னினேன். நேற்று எனது தாய், என்னிடம் கூறினார், நீங்கள் தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. இன்று நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாகவும் சென்றேன்" என எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை திமுக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.