காடுகளை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகள், கிராமங்களில் மழைக்காலம் வந்துவிட்டாலே பாம்புகள் வீட்டிற்கு படையெடுக்கும். கவனமாக இல்லாவிட்டால் பாம்புகளின் தாக்குதலுக்கு இரையாக வேண்டியிருக்கும். இதனால், மழைக்காலங்களில் கிராம பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகவே இருப்பார்கள். அதுவும் இப்போதெல்லாம் லைட் மற்றும் சிசிடிவிக்கள் இருப்பதால், இரவில் கூட பாதுகாப்பாக சென்று வரலாம். மேலும், பாம்புகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கலாம்.
மேலும் படிக்க | Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசாலடாக அள்ளி வீசும் நபர்!
இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவும் சிசிடிவியில் பதிவான பாம்பின் நடமாட்டம் தான். அந்த வீடியோ காண்போரை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறது. அப்படி என்ன என நீங்கள் யோசிக்கலாம். குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஊர்ந்து வரும் பாம்பு, யாரையும் கடிக்கவில்லை. மாறாக, அங்கிருந்த செருப்பு ஒன்றை அவ்வளவு வேகமாக கவ்விச் செல்கிறது. இது பார்ப்பதற்கே புதுமையாக இருக்கிறது. செருப்பை எடுத்துச் சென்று பாம்பு என்ன செய்யும்? என்ற கேள்வி எழுகிறது.
I wonder what this snake will do with that chappal. He got no legs. Unknown location. pic.twitter.com/9oMzgzvUZd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 24, 2022
டிவிட்டரில் ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தான் பாம்பின் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவரும் இதே கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவர் பதிவிட்டிருக்கும் கேப்சனில், எனக்கு வியப்பாக இருக்கிறது, அந்த செருப்பை எடுத்துச் சென்று பாம்பு என்ன செய்யும்? என கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் பாம்பு உள்ளிட்ட ஊர்வனவும், விலங்குகளும் உணவு முறையில் மாற்றிக் கொண்டுள்ளன.
மனிதர்களைப் போலவே காலநிலை மாற்றத்தால் அவற்றின் உணவுகள் மாறி பிளாஸ்டிக் உள்ளிட்டவைகள் உண்ணுகின்றன. இது சூழலியலுக்கு பெரும் ஆபத்தான விஷயம் என்றாலும், தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பது எதார்த்தமாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஐஎப்எஸ் அதிகாரி எழுப்பிய கேள்வியை தான் திரும்ப திரும்ப கேட்கின்றனர்.
மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ