Zodiac Signs That Has Major Trust Issues : ஒரு சிலருக்கு அவர்களின் ராசியின் பலன்களின் படி, அவர்களின் குண நலன்களும் அமையும். உதாரணத்திற்கு ஒரு சில ராசிக்காரர்கள் எப்போதும் பிறரிடம் பழகும் போது பார்து பார்த்துதான் பழகுவர். இன்னும் சிலர், தங்களிடம் இருக்கும் குறைகளை பிறர் தெரிந்து கொள்ள கூடாது என நினைப்பர். இப்படி, ஒரு சில ராசிக்காரர்களுக்கு பிறர் மீது நம்பிக்கை வைப்பதே கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் யார் தெரியுமா?
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் விஷயம் என்று வந்துவிட்டால் அதை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு குணாதிசயமே அப்படித்தான். நம்மைப் பற்றி பிறரிடம் கூறினால் இங்கே நம்மை யாராவது முதுகில் குத்துவிடுவார்களோ அல்லது இதை வேறு யாரிடமும் கூறிவிடுவார்களோ என்ற பயத்தினாலேயே யாரிடமும் தங்களைப் பற்றி கூறாமல் இருப்பர். இது, இவர்களை மனம் விட்டு பேசக்கூட ஒத்துழைக்க விடாமல் செய்யும். காயம் பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் இதயத்தை பார்த்து பார்த்து பாதுகாக்கும் இவர்கள், பிறரை எளிதில் நம்ப மறுக்கின்றனர். இதனாலேயே இவர்கள் பிறரிடம் பழகுவதற்கு முன்பு அவர்களின் நேர்மையை மிகவும் சோதனை செய்து நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வர்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் அனைத்தையும் நடைமுறை சிந்தனையில் சிந்திப்பவர்கள். இதனாலேயே இவர்கள் பல விஷயங்களை அது சிறிதாக இருந்தாலும் கூட பெரிதாக யோசிப்பார். இப்படி அவர்கள் ரொம்ப யோசிப்பது அவர்களுடன் பழகுபவர்களின் நடவடிக்கையை ஆழ்ந்து கவனிக்க செய்யும். பிறர் கவனிக்காமல் விடும் பல விஷயங்களை இவர்கள் பார்ப்பதால் பிறரின் முரண்பட்ட எண்ணங்களையும் செயல்பாடுகளையும் எளிதில் அறிந்து கொள்ளவர். இதனால் அவர்களுக்கு பிறரை நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தன்னிடம் யாரேனும் புதிதாக வந்த பழகினால் கூட, அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று யோசித்து தங்களை அந்த நபர்களிடமிருந்து விலகிக் கொள்வர். இவர்களுடன் நண்பராவதற்கு பல நாட்கள் அல்ல பல ஆண்டுகள் தேவைப்படும். இவர்கள் ஒருவரை நம்பி சில விஷயங்களை கூறுகிறார் என்றால் அந்த நபர் இவர்களுடன் பல ஆண்டுகள் பழகியவராக இருப்பார்.
மகரம்:
மகர ராசி காரர்கள் ஒருவரை கண்மூடித்தனமாக நம்பாமல் என்ன உண்மை இருக்கிறதோ, அதை மட்டுமே நம்புவர். அதேபோல இந்த புது உறவு இவர்கள் வாழ்வில் வந்தாலும் அதனை மிகப் பொறுமையுடன் கையாள்வர். தன் மனம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, எதையும் பிறரிடம் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்ப்பர். இதனால் இப்போதும் தனக்கு ஒரு அரண் வைத்துக் கொண்டு இருப்பர். ஒருவரை நம்ப வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு தகுதியை வைத்திருப்பவர்கள் அந்த அளவிற்கு இல்லாதவர்களை நம்பவே மாட்டார்கள்.
மேலும் படிக்க | மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் எந்த விஷயத்திற்கும் ஒருவரை நம்புவதற்கு பதிலாக தானே அதை செய்து கொள்ளலாம் என்று நினைப்பர். இதனால் இவர்களுக்கு யார் மீதும் உணர்ச்சி அளவில் இல்லாதது போல இருக்கும். யாருடனாவது அப்படி ஒட்டுதல் ஏற்பட்டால் எங்கே அவர் நம்மை கட்டுப்படுத்துவாரோ அல்லது எதற்காவது தடைவிதிப்பாரோ என்பதாலேயே அனைவரிடமிருந்தும் உணர்ச்சி ரீதியாக விலகி இருப்பர். இருப்பினும் தனக்கு ஒரு வருடம் பாதுகாப்பான உணர்வு ஏற்பட்டு பிறகு என்றால் அவர்களை தாராளமாக இந்த மாதிரி தன்னை பற்றிய பல விஷயங்களை கூறுவர்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே உணர்ச்சி மிக்கவர்களாகவும், சின்ன விஷயம் நடந்தாலும் அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர். இதனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ அல்லது முதுகில் குத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் இருக்கும். அதனால் தான் யாரையும் நம்பாதது போல வெளியில் காட்டிக்கொள்வார்கள். இப்படி இவர்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது, பல இடங்களில் வெளியில் தெரிந்துவிடும். எப்படி இவர்களுக்கு ஒருவர் மீது நம்பிக்கை வர வேண்டும் என்றால் அவர்கள் இவர்களிடம் தொடர்ச்சியாக உறுதியளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ