மூளை ஜெட் வேகத்தில் இயங்க... ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகள்

Antioxidant Foods To Boost Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம்.  மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்த, சில ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2024, 12:25 PM IST
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கும் பொருட்கள்.
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் உடலுக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • மூளைக்கான ஆற்றலை வழங்கி, அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை குறைக்கும் உணவுகள்.
மூளை ஜெட் வேகத்தில் இயங்க... ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகள் title=

Antioxidant Foods To Boost Brain Power: மூளை ஆரோக்கியம் என்பது மனித உடலின் இன்றியமையாத அம்சம். இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை காரணமாக, மூளை விரைவில் சோர்வாகும் நிலை உண்டாகிறது. அதோடு, நமக்கு வயதாகும்போது, உடலின் மற்ற பாகங்களைப் போலவே, மூளைக்கும் வயதாகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம்.  மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஒட்டுமொத்த நரம்பியல் ஆரோக்கியம் மேம்பட சில உணவுகளும் பழக்கங்களும் உதவும்ன் என நிபுணர்கள்பரிந்துரைகின்றனர். 

மூளை ஆரோக்கியம்

ஆரோக்கியமான உடலை பெற சில உணவு மற்றும் உடற்பயிற்சி உதவும் அதே நேரத்தில், உடற்பயிற்சி மற்றும் தியானம் உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதோடு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் உடலுக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் நல்லது. கென்டக்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு, மூளைக்கான ஆற்றலை வழங்கி, அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை குறைக்கிறது. அதோடு வயதானவர்கள் அதிக ஆக்ஸிஜனேற்ற உணவுகளால், அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயம் பெருமளவில் குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு

இதய பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற பல நோய்களின் அபாயத்தை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நன்மைகள் குறித்து உலகம் முழுவதும் பல விதமான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து, தொடர்ந்து ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸிஜனேற்றம் என்றால் என்ன?

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கும் பொருட்கள். இவை செல் சவ்வுகள் மற்றும் பிற சேதங்களைப் பாதுகாக்கும். ஆக்ஸிஜனேற்றிகள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம். இவை பல்வேறு உணவுகளில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க | காலை உணவில் செய்யும் 4 தவறுகள் LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்..!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நிறைந்த உணவுகள்

1. பழங்கள் - கிரான்பெர்ரிகள், அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள், ஆப்பிள்கள் மற்றும் உலர்ந்த பழங்கள்

2. காய்கறிகள்- கீரை, கேரட், ஸ்குவாஷ், ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி மற்றும் பச்சை மிளகாய்

3. நட்ஸ் மற்றும் விதைகள் - பாதாம், வாதுமை பருப்பு உள்ளிட்ட உலர்பழங்கள்

4. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் - வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற அல்லியம் சல்பர் கலவைகள் நிறைந்த உணவுகள்

5. கோகோ - டார்க் சாக்லேட்

6. இது தவிர, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்ற குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள்

1. மூளை செல்களுக்கு பாதிப்பு

2. புற்றுநோய்

3. கண் புரை பாதிப்பு

4.  இதய நோய்

5. மூட்டுகளின் வீக்கம்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

(பொறுப்பு துறப்பு:இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News