Home Remedies For Burnt Mouth And Tongue : நாம் சமைத்த உணவு அல்லது நமக்கு பிடித்த உணவை டேஸ்ட் பார்க்கிறோம் என்ற பெயரில் அப்படியே வாயில் ஊற்றி சுட்டுக் கொண்டிருப்போம். அல்லது டீ-காபி குடிக்கும் வேலைகளில் தெரியாமல் நாக்கை சுட்டுக் கொள்வோம். இந்த அனுபவம் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கும். சூடான உணவு பொருளை நாக்கில் வைத்தவுடன் சதையில் வைத்தவுடன் சுடுவது போல் எல்லாம் இருக்காது. அதை சாப்பிட்ட பின் வேறு எதை சாப்பிட்டாலும் அதன் சுவையை உணர முடியாத தன்மை இருக்கும். நாக்கு மரத்து போன்ற உணர்வு ஏற்படும்.
நாக்கு தசைகள் மற்றும் வாயில் உள்ள பிரதசைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் இப்படி எளிதில் நாம் சில முறை சுட்டுக் கொள்வது உண்டு. இதை சரி செய்ய சில எளிதான வழிமுறைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
பால் அல்லது தயிர்:
இயற்கை கொடுத்திருக்கும் சுவையான அருமருந்துகளில் ஒன்று பால் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள். நாக்கை சூடான உணவுகளால் சுட்டுக் கொண்டால் தயிர் அல்லது பாலை ஒரு ஸ்பூன் வாயில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இது வலியை குறைப்பதுடன் புண் ஆறவும் செய்யும். அப்படி இல்லை என்றால் குளிர்ந்த நீரை அல்லது பாலை குடிக்கலாம்.
தேன்:
சூடான உணவை சாப்பிட்டு வாயை புண்ணாக்கி கொண்டால் புண் ஏற்பட்ட இடத்தில், சிறிதளவு தேனை தடவலாம். இது உடனடியாக வலி நீங்குவதற்கு உதவும். அதுமட்டுமல்ல இதில் அலட்சிய எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் வீக்கம் ஏற்படுவதை தடுப்பதோடு புண் சீக்கிரமாக ஆறவும் உதவும். எரிச்சல் ஏற்படுவதும் நீங்கும்.
உப்பு தண்ணீர்:
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தாலும் இதற்கு தீர்வாக அமையும். சூடான உணவினால் வாயை சுட்டுக் கொண்டவுடன் அரை ஸ்பூன் உப்பை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதன் மூலம் வாய் கொப்பளித்து கீழே துப்பலாம். இதில் இருக்கும் இயற்கையான வளர்ச்சி எதிர்ப்பு தன்மை வலியை குறைப்பதோடு வீக்கம் வராமல் தடுத்து சீக்கிரமாக அந்த புண் ஆறுவதற்கு உதவும்.
சர்க்கரை:
வாயை சுட்டுக் கொண்டவுடன் எந்த இடத்தில் காயப்பட்டதோ அங்கு சிறிதளவு சர்க்கரையை வைக்கலாம். இது ஒரு வித பாதுகாப்பு வளையத்தை அந்த அடிபட்ட இடத்தில் உருவாக்கி வலியை குறித்து விரைவில் புண் ஆறுவதற்கு உதவும். இதனை உபயோகித்த பலர் இது சிம்பிளாக இருந்தாலும் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் தாங்கள் குணமானதாகவும் தெரிவிக்கின்றனர்.
கெமோமில் டீ:
சாமந்திப்பூவின் ஒருவகையை சேர்ந்தது Chamomile பூ. இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் அடங்கியிருக்கின்றன. உணவு சூட்டினால் வெந்து போன வாயை இந்த பூ கலந்த டீயினால் ஆற்றலாம். குளிர்ந்த நீரில் இந்த டீ பேக்கை போட்ட பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்து இதை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். அந்த டீ பேக் ஐயும் தூக்கி போடாமல் எந்த இடத்தில் அடிபட்டதோ அந்த இடத்தில் வைத்து சிறிது நேரம் புண்ணை ஆற்றலாம். இது உடனடி வலி நிவாரணியாகவும் அமையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க எளிய வீட்டு வைத்தியம்!
மேலும் படிக்க | இந்த வீட்டு வைத்தியம் முடி பிரச்சனைக்கு ஒரேடியாக தீர்வு தரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ