ஒரு மாணவர் ஒரு லேப்டாப் யோஜனா திட்டம் : மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தகுதி, ஆவணங்கள் விவரம்

Free laptop | ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2025, 02:52 PM IST
  • மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம்
  • மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் சூப்பர் திட்டம்
  • இந்த திட்டத்தின் பயனாளியாக இருப்பது எப்படி?
ஒரு மாணவர் ஒரு லேப்டாப் யோஜனா திட்டம் : மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தகுதி, ஆவணங்கள் விவரம் title=

Free laptop Scheme | ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா 2024 என்பது மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக தொழில்முறை, இளங்கலை அல்லது உயர்நிலைப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை பெற்றுக்கொள்ளலாம்.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

பின்தங்கிய மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் கற்றல் கருவிகளை உறுதி செய்தல் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். AICTE-அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர், ஒரு லேப்டாப் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான உரிய நிதியை மத்திய மாநில அரசுகள் செலுத்தும்.

கல்வித் தகுதி என்ன?

உயர்நிலைப் பள்ளிகள், இளங்கலை கல்லூரிகள், டிப்ளமோ படிப்புகள் அல்லது தொழில்முறை திட்டங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க வேண்டும்.

வருமான வரம்பு என்ன?

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம், இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநிலம் அல்லது அதிகாரத்தைப் பொறுத்தது. அதிகபட்சம் குடும்ப ஆண்டு வருமானம் ₹2,50,000 மேல் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர்கள் ஒரு மாணவர் ஒரு லேப்டாப் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.

கூடுதல் நிபந்தனைகள் உள்ளதா?

SC/ST/OBC/PwD பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். வேறு அரசு திட்டத்தின் கீழ் ஏற்கனவே மடிக்கணினி பெற்ற மாணவர்கள் தகுதியற்றவர்கள்.

விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?

கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான வரி சான்றிதழ், 

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் என்றால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் படிக்கும் கல்லூரிகளில் இந்த திட்டம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு கல்லூரிகள் வழியாக ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. மத்திய அரசு திட்டம் என்றால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த இணைய பக்கத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?

மேலும் படிக்க | மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News