Health Tips In Tamil, Badam: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பொருட்களை உண்பது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை சாப்பிடுவதிலும் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொருட்களையும் குறைவாக சாப்பிட்டால்தான் நன்மை தரும். அது மட்டுமின்றி ஆரோக்கியமான பொருட்களை சாப்பிடும் போதும் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் நேர்ந்தாலும், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அப்படி இருக்க பாதாம் பருப்பு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றாலும், பாதாமை சாப்பிடும் போது ஒரு சில தவறுகளை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. பாதாம் பருப்பில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக அதில் கனிமங்கள், ஆன்டிஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புச் சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. இதனால் உங்களின் கொலஸ்ட்ரால் அளவும் குறையும், ரத்த சர்க்கரை அளவு சீராகும், செரிமான அமைப்பும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
ஆனால் இந்த ஆரோக்கியமான நன்மைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் பாதாமை நீங்கள் சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். தவறான முறையில் கொண்டால் முன்னர் கூறியது போல் உடல்நல பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது. அப்படி இருக்க பாதாமை உட்கொள்ளும் போது நாம் பெரும்பாலும் மேற்கொள்ளும் தவறுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
அவ்வப்போது பாதாம் சாப்பிடுவது தப்பு
நீங்கள் பாதாம் பருப்பை உங்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டால் அதனை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். ஒருநாள் சாப்பிட்டுவிட்டு அடுத்த சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது, அதன்பின் ஓரிரு நாள்கள் சாப்பிடுவது என்ற பழக்கத்தை வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பாதாமை தொடர்ச்சியாக உட்கொள்வதுதான் சரியான முறையாகும். நீங்கள் அவ்வப்போது மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்களின் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அளவு மற்றும் வைட்டமின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இதனால் உங்களின் இதய ஆரோக்கியம், செரிமானம், ஆற்றல் அளவு ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம்.
பாதாமை வறுத்து சாப்பிடாதீங்க மக்களே
அதேபோல் பாதாமை வறுத்து சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல. அதாவது நீங்கள் அதில் உள்ள ஆரோக்கியத்தை முழுமையாக பெற வேண்டும் என்றால் அதனை ஊற வைத்தோ அல்லது பச்சையாகவோ கூட சாப்பிடலாம். உரிக்கப்படாத முழுமையான பாதாம் பருப்புகளை உட்கொள்வது சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஏனென்றால் அதில் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தோல் உரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளை உட்கொள்வதால் உங்களுக்கு புரதச்சத்தும் ஆரோக்கியமான கொழுப்புகளும் கிடைக்கும்.
மேலும் படிக்க | பப்பாளி இலை ஜூஸ் மட்டும் குடித்தால் மூன்றே நாட்களில் 20 வயது குறைந்துவிடும்?
இப்படி வைத்தால் பாதாம் அழுகிப் போகும்
பாதாம் பருப்புகளை வீட்டில் முறையற்ற வகையில் சேமித்து வைப்பதும் கேடுதான். அதாவது வெயில் படும் இடங்களிலோ, அதிகம் வெளிச்சம் படும் இடங்களிலோ, ஈரப்பதம் இருக்கும் இடங்களிலோ நீங்கள் பாதாமை சேமித்து வைத்தால் அதுவும் தவறுதான். இதன்மூலம் பாதாம் அழுகிப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவை இரண்டும் போய்விடும். எனவே நன்கு பூட்டப்பட்ட டப்பாவில் பாதாமை போட்டு வையுங்கள். அந்த டப்பாவை நீங்கள் குளிர்ச்சியான மற்றும் ஈரம் இல்லாத இடங்களில் சேமித்து வைத்து தினமும் எடுத்து சாப்பிடுங்கள்.
குறிப்பிட்ட அளவு பாதாம் மட்டும் சாப்பிடுங்க
முன்னர் சொன்னது போல் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை என்றுமே மறக்காதீர்கள். பாதாமை நீங்கள் தினமும் எடுத்துக் கொண்டாலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகம் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரம் அலர்ஜிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதிக பாதாமை உட்கொள்வது கலோரிகள் மற்றும் கொழுப்பையும் அதிகமாக்கும் என்பதை மறவாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | வேலையே செய்யலனாலும் ஓவரா வியர்வை வருதா..அப்போ உங்கள் உடலுக்கு இந்த பிரச்சனை வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ