சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு பண விரயம், மன அமைதி கெடும், ஜாக்கிரதை!!

Shani Asta 2023: 4 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் பிரச்சனைகளை உண்டுபண்ணும். இவர்கள் இந்த நேரத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2023, 06:50 PM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் முழுவதுமாக அஸ்தமித்தது ஆரோக்கியத்தைப் பொருத்தவரை சாதகமற்றது.
  • ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம்.
  • தொண்டை மற்றும் வாயில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூட்டும்.
சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு பண விரயம், மன அமைதி கெடும், ஜாக்கிரதை!! title=

சனி பகவானின் அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, கோள்கள் அவ்வப்போது அஸ்தமன நிலைக்கு செல்கின்றன. கோள்களின் அஸ்தமன நிலையின் காரணமாக மனித வாழ்விலும் பல வித மாறுபாடுகள் ஏற்படும். சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமாக கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் முழுவதுமாக அஸ்தமன நிலையில் உள்ளார். 

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன்பின்னர், சனி, ஜனவரி 31ஆம் தேதி தனது சொந்த ராசியில் அஸ்தமித்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் மீண்டும் உதயமாவார். 

ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும் போது, ​​அதாவது 4 -க்கு அருகில் வரும் போது, அதனால் அந்த கிரகம் முழுமையாக அஸ்தமிக்கிறது. சனி பகவானின் அஸ்தமன நிலையின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் பிரச்சனைகளை உண்டுபண்ணும். இவர்கள் இந்த நேரத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அஸ்தமன நிலை தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சனிபகவான் மிதுன ராசியில் ஒன்பதாம் ஸ்தானத்தின் அதிபதியாகவும் எட்டாம் ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். இவை தந்தை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தின் காரணிகளாக உள்ளன. இந்த நிலையில், நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருப்பவர்கள் ஆகியோர் மீது அதிகப்படியான கவனம் தேவை. 

மேலும், இந்த நேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கவும். ஏனெனில் விபத்துக்கான வாய்ப்புகள் இப்போது உள்ளன. பண விரயம் ஏற்படும். ஆகையால் சிக்கனமாக இருப்பது நல்லது. 

கடகம்

சனி பகவானின் முழுமையான அஸ்தமனம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் உங்கள் ஏழாம் மற்றும் எட்டாம் ஸ்தானத்தின் அதிபதி. ஆகையால், இந்த நிலை உங்களுக்கு நல்லதல்ல. உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று இதற்கு அர்த்தம். 

மேலும், உங்கள் மனைவியுடன் புரிதலோடு நடந்துகொள்ளுங்கள். இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். நிதி நிலையில் சிக்கல் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு ரகசியமாக பணமழை பொழியும்! அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 

மகரம்

சனி பகவானின் முழு அஸ்தமன நிலை, மகர ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் உங்கள் லக்னத்தின் அதிபதி சனி தேவன். ஆகையால், இந்த நேரத்தில் உடல் உபாதைகள் ஏற்படலாம். காய்ச்சல் வரக்கூடும். சளி, இருமல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். எனினும், குறைந்தது 15 முதல் 20 நாட்களில் சரியாகிவிடுவீர்கள். 

வாழ்க்கைத்துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். மறுபுறம், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் மெதுவாக இருக்கும். பொறுமையாக இருந்தால் எளிதாக விட்டதை பிடிக்கலாம்.

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் முழுவதுமாக அஸ்தமித்தது ஆரோக்கியத்தைப் பொருத்தவரை சாதகமற்றது. ஏனெனில் சனிபகவான் உங்கள் ராசியின் லக்னம் மற்றும் 12 ஆம் ஸ்தானத்திற்கு அதிபதியாக இருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் மீது பொய் வழக்கு தொடரப்படலாம். 

மேலும், ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம். தொண்டை மற்றும் வாயில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூட்டும். உடலில் தொற்றுகள் ஏற்படும். பல வித பணிகளை செய்ய நீங்கள் திட்டமிட்டாலும், அவை வெற்றிகரமாக முடிவதில் சிக்கல் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | குருவின் அருளால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News