ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?

NO Shani Peyarchi In 2024 :L சனீஸ்வரரின் கும்ப ராசி உதயம் அஸ்தமனம், வக்ரகதி இயக்கம் ஆகியவை உங்கள் ராசிக்கு சாதகமானதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா? பரிகாரங்களைதெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2024, 07:41 PM IST
  • பாரமாய் அழுத்தும் சனி
  • சனி கொடுக்கும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள்!
  • சஞ்சாரத்தை மாற்றாமலேயே பாதிக்கும் சனீஸ்வரர்
ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்? title=

சனிப்பெயர்ச்சி என்றாலே அனைவருக்கும் பதற்றம் அதிகமாகும். ஆனால், 2024 ஆம் ஆண்டில் சனியின் ராசிப்பெயர்ச்சி இல்லை என்பது ஆசுவாசம் தருகிறது. ஆனால், சனியின் ராசிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், நட்சத்திரப் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, உதயம் அஸ்தமனம் என வேறுவிதமான மாற்றங்களை சனியின் இயக்கம் நடத்துகிறது. இதன் பாதிப்புகள், ராசி மாற்றம் அளவிற்கு இல்லை என்றாலும், ஓரளவாவது இருக்கும்.

சனீஸ்வரரின் இந்த மாற்றங்கள் உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா என்பதையும் அதற்கான பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம். 

2024 ஆம் ஆண்டில், சனி கும்ப ராசியில் மட்டுமே சஞ்சரிக்கும். வேறு எந்த ராசிக்கும் செல்லவில்லை. ஆனால் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமிக்கும் மற்றும் உதயமாகும் என்பதால் அதன் விளைவுகள் சாதகமானதாகவும் பாதகமானதாகவும் இருக்கும். இந்த கணிப்புகள் அனைத்துமே பொதுவானவை, ஜாதகத்தில் சனியின் நிலை தான் ஒருவரின் பாதிப்பையோ அதிர்ஷ்டத்தையோ சொல்லும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.  

மேலும் படிக்க | மனித சதையை உண்ணும் அகோரிகள்! நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளின் வாழ்க்கைமுறை!

சனி கடும் உழைப்பைக் குறிக்கும் கிரகம், ஆசிரியரைப் போல, தவறுக்கு தண்டிக்கத் தவறுவதில்லை. சனியின் தாக்கம், ஒருவரை ஒழுக்கமானவராக மாற்றும். சனியின் பாதிப்புகளை கண்டு பயப்படுபவர்களுக்கும் கூட சனிபகவான் நன்மையைத் தான் செய்வார். கஷ்டங்களைக் கொடுத்து, உலகத்தையும் நிதர்சன நிலைமையும் புரிய வைக்கும் ஆசான் சனீஸ்வரர் என்று சொன்னால் மிகையாகாது. உண்மையில், சனீஸ்வரர் கற்றுக்கொடுக்கும் பாடங்களை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவதும் நன்மைகளை அனுபவிக்கலாம். 

பிடிவாதம் என்பது சனீஸ்வரரின் குணமாக இருப்பதால், சனீஸ்வரரின் தாக்கம் இருக்கும்போது, ஒருவர் தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கமாட்டார். சனியின் தாக்கத்தினால், லட்சியத்தை அடையும் முயற்சியில் ஒருவர் உறுதியாக இருப்பார். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனீஸ்வரரின் அஸ்தமனமும் உதயமும், அனைவரின் தொழில், வேலை, திருமணம், காதல் வாழ்க்கை, குழந்தைகள், கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும்.

சனியின் இந்தத் தாக்கத்தின் அடிப்படையில், அவரை ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர் என்றும் சொல்லலாம். ஆனால், தஞ்சமடைந்தவர்களின் துன்பத்தை குறைத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று சொல்லும் அளவுக்கு துன்பத்தை மடை மாற்றும் சக்தி, சனீஸ்வரரை வழிபாட்டிற்கு உண்டு.

மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

சனி பரிகார தலங்கள்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், குச்சனூர் சனிபகவான் கோயில், திருகொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், திருவானைக்கால் சனி கோவில் என சனியின் பரிகார தலங்களுக்கு சென்று சனீஸ்வரரை தஞ்சம் அடைந்தால் துன்பத்தை சுலபமாக கடந்துவிடலாம். 

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள்
வீட்டில் சமைத்த உணவை தினமும் காகத்திற்கு வைக்கவும், நாம் உணவு உண்பதற்கு முன்னதாக எச்சில் படாமல் வைப்பது நல்லது
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு விளக்கில்  நல்லெண்ணெய் தீபம் போடலாம்
சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அலங்கரிப்பதும் அர்ச்சனை செய்வதும் நல்லது
சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
சனிக்கிழமைகளில் அனுமார் வழிபாடு சனிபகவானின் தொல்லைகளைக் குறைக்கும்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்  காலபைரவரை வழிபடுவது சனீஸ்வரரின் தாக்கத்தை குறைக்கும் 
தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு
சனிபிரதோஷத்தன்று சிவ வழிபாடு சனியினால் ஏற்படும் துன்பங்களைப் போக்கும்
வன்னிமரத்தை சுற்றிவந்து வணங்கினால் சனிபகவானின் பாதிப்புக்கள் மட்டுப்படும் 
சனிக்கிழமைகளின் அனுமார் வழிபாடு

மேலும் படிக்க | சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News