திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கப்பிரதட்சணம் செய்ய ஆஃப்லைனில், அதாவது நேரடியாக டிக்கெட்டுகள் பெற வேண்டிய சூழல் இருந்த நிலையில் அந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் விதமாக அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் ஆன்லைன் வழியாகவே டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு சனியின் ராசியில் திரிகிரஹி யோகம், இந்த ராசிகளுக்கு லட்சுமி அருள்
திவ்ய தரிசன டிக்கெட்
அதேபோல் இனிவரும் நாட்களில் அனைவருக்கும் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படாது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலைக்கு படிக்கட்டுகளில் வரும் பக்தர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் விஐபி, தர்ம தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு டோக்கன்களை ஆன்லைனில் புக் செய்துவிட்டு வருவதாகவும், அவர்களும் மலைப்பாதை வழியாக வரும்போது திவ்ய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது. எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.
ஆதார் எண் கட்டாயம்
இதற்காக திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிறப்பு தரிசனம் உள்ளிட்ட ஏதாவதொரு டிகெட்டை பக்தர்கள் வைத்திருந்தால் அவர்கள் ஆதார் எண் மூலம் அடையாளம் காணப்பட்டு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படாது. ஏனென்றால் ஆன்லைனில் திருப்பதிக்கு டிக்கெட் புக் செய்தாலும் ஆதார் எண் மட்டுமே ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற ஆவணங்கள் இனி ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பக்தர் திவ்ய தரிசனத்திலும், சிறப்பு தரிசனத்திலும் கோவிலுக்குள் செல்வதாக புகார்கள் எழுந்த நிலையில் அதனை தடுக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | திருப்பதி: பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது ஏன்?
மேலும் படிக்க | திருப்பதி: திவ்ய தரிசன டிக்கெட் மீண்டும் எப்போது வழங்கப்படும்? தேவஸ்தானம் தகவல்
மேலும் படிக்க | திருப்பதி: ஆதார் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ