மகளிர் உலக கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் கரூர் தாக்கம் அதிகமாகவே தென்பட்டது. இதனை கௌரவ படுத்தும் வகையில் கிரிக்கெட் உலகின் கௌரவமான விருதான ESPNCricinfo விருதுகள் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
அதேவேலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோரும் இந்த விருதுகள் மூலம் பெருமை படுத்தப்பட உள்ளனர்.
கிரிக்கெட் துறையில் சிறப்பாக செயலாற்றிய வீரர் வீராங்கணை 12 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த 12 விருதுகளில் 3 விருதுகளை இந்திய வீரர்கள் தட்டிச்சென்றனர்.
உலகக் கோப்பை போட்டியின் போது ஹர்மன்பிரீட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்து அணியின் பெயரினை நிலைநாட்டினார். இதன் விளைவாக பெண்கள் பிரிவில் திரம்பட செயல்பட்ட வீராங்கணை பட்டியலில் இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
பெங்களூரில் நடைப்பெற்ற இங்கிலாந்து எதிரான மூன்றாவது T20 போட்டியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் சஹால், தனது மந்திர பந்துவீச்சால் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதேப்போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் தனது திறனை வெளிப்படுத்திய யாதவ், 2017 ஆம் ஆண்டில் அறிமுக நாயகனாக களமிறங்கிய அதிகபடியான விக்கெட்டுகளை (43) குவித்த வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். இந்த செயல்பாடுகளின் காரணமாக இந்திய அணியை சேர்ந்த இம்மூவருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது!