தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி

தற்போதைய ஐபிஎல் சீசனில் தோனியின் பேட்டிங் எதிர்பார்த்தப்படி இல்லை என்றும், அதேவேளையில், சிஎஸ்கே (Chennai Super Kings) கேப்டனுக்கு 40 வயதாகிவிட்டது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று ஹாக் கூறியுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 28, 2021, 01:42 PM IST
  • கடந்த இரண்டு ஐபிஎல் பதிப்புகளில் தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது
  • சிஎஸ்கே கேப்டனுக்கு 40 வயதாகிவிட்டது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
  • அடுத்த ஆண்டு தோனி என்ற வீரர் இல்லாமல் ஒரு புதிய சகாப்தத்தை CSK தொடங்கலாம்.
தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்:  ஹாக் அதிரடி title=

புது டெல்லி: உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கான ஒரு இடத்தை ஆழமாக பதித்துள்ள கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ். தோனியை குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறிய கருத்து தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. மீண்டும் தோனி ஓய்வு குறித்து பேசப்படுகிறது.

ஆஸ்திரேலியா வீரர் பிராட் ஹாக் (Brad Hogg), ஐபிஎல் 2021 தொடர் எம்எஸ் தோனியின் கடைசி பதிப்பாகும் என்று தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஒரு ரன் மட்டும் எடுத்து வருண் சக்கரவர்த்தியின் (Varun Chakravarthy) பந்தில் ஆட்டமிழந்ததை அடுத்து பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஐபிஎல் பதிப்புகளில் அவர் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் நடப்பாண்டு தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் வெறும் 52 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். தற்போதைய ஐபிஎல் சீசனில் தோனியின் பேட்டிங் எதிர்பார்த்தப்படி இல்லை என்றும், அதேவேளையில், சிஎஸ்கே (Chennai Super Kings) கேப்டனுக்கு 40 வயதாகிவிட்டது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று ஹாக் கூறியுள்ளார். 

ALSO READ | IPL 2021: நெட் பயிற்சியில் கலக்கிய தோனி, கலங்கிய மற்ற அணிகள், watch video!!

மேலும் பேசிய ஹாக்"அவர் (MS Dhoni) ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறப் போகிறார் என்று நான் நினைக்கிறேன். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட் மற்றும் பந்து இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது. அதன் காரணமாக அவர் வருண் சக்கரவர்த்தியிடம் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு காரணம் அவரின் வயதாகக்கூட இருக்கலாம் என நான் நினைக்கிறேன். வயது அதிகமாக அதிகமாக பந்தை கணித்து அடிப்பதில் சிக்கல் இருக்கும் என தனது யூடியூப் சேனல் (YouTube channel) மூலம் ஹாக் தெரிவித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட்டுக்கும் சிஎஸ்கேவுக்கும் நல்ல விசியம் எதுவென்றால், அவர் ஒரு அணியை வழிநடத்தி செல்லும் விதம் அற்புதமாக இருக்கிறது. அவர் அமைதியாக சிந்திக்கிறார் மற்றும் ஜடேஜா ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வளரவும், பல இளைஞர்களை வளர்க்கவும் உதவினார். அவர் அவுட் ஆகி வெளியேறும் போது, அவரின் அந்த உடல் அசைவை பார்த்ததும், தோனியா இது என நினைத்தேன். அவரை அப்படி பார்த்ததும் ஒருவேளை எனது கண்கள் கூர்மையை இழந்துவிட்டதா என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி (Mahendra Singh Dhoni), அக்டோபர் 17 -ம் தேதி தொடங்கும் டி 20 உலகக் கோப்பையில் ( T20 World Cup) இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதில் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று ஹாக் நம்புவதாகக் கூறினார். 

ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில், CSK ஒரு முழுமையான மறுசீரமைப்பிற்கு செல்லலாம், தோனி என்ற வீரர் இல்லாமல் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கலாம்.

40 வயது ஆகிவிட்டது மற்றும் டி 20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு அல்லது சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராக இனி அவரின் அவதாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என ஹாக் மேலும் கூறினார்.

ALSO READ | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News