நேற்று நடைபெற்ற IPL ஏலத்தில் யூசுப் பதான் எந்தொரு அணி உரிமையாளர்களாகும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எனவே வரவிருக்கும் IPL பருவத்தில் யூசப் பிரவேசம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், அவரது சகோதரரும், அனுபவமிக்க பந்து வீச்சாளருமான இர்பான் பதான் தனது சகோதரரின் பின்னால் தனது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து இர்பான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "அவர் ஒரு உண்மையான நட்சத்திரம், இந்த சிறிய விக்கல்கள்(தடைகள்) அவரது வாழ்க்கையை வரையறுக்கக் கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மிகவும் ஆற்றல்மிக்க ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்பட்ட யூசுப், கொல்கத்தாவில் வியாழக்கிழமை மாலை நடந்த IPL ஏலத்தில் எந்த ஒரு அணியாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
Small hiccups doesn’t define your career,you have been outstanding thru out. A real match winner. Love you always Lala @iamyusufpathan pic.twitter.com/h3tw3AjoGS
— Irfan Pathan (@IrfanPathan) December 19, 2019
இந்நிலையில் இதுகுறித்து இர்பான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் “சிறிய விக்கல்கள்(தடைகள்) உங்கள் வாழ்க்கையை வரையறுத்துவிடாது. நீங்கள் ஒரு சிறந்த வீரர். ஒரு உண்மையான போட்டி வெற்றியாளர். லவ் யூ லாலா.” என பதிவிட்டுள்ளார்.
நடந்த முடிந்த ஏலத்தில் யூசுப் தனது அடிப்படை விலையினை ரூ .1 கோடியாக நிர்ணயித்தார். இருப்பினும் அவரை எந்த அணி உரிமையாளரும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. தனது தொழில் வாழ்க்கையில் இதுவரை 174 IPL போட்டிகளில் விளையாடிய 37 வயதான வீரர், வரும் சீசனில் இருந்து விலக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் முன்னர் 2018 மற்றும் 2019 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார், ஆனால் பின்னர் இந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பு அணியால் விடுவிக்கப்பட்டார். மேலும், அவர் 2011-17 ஆண்டுகளுக்கு இடையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)-ன் ஒருங்கிணைந்த உறுப்பினராக இருந்தார், மேலும் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் KKR வென்றதற்கு ஒரு பெரிய காரணமாக யூசப் இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
வலது கை ஆல்ரவுண்டர் 142.97 ஸ்ட்ரைக் வீதத்தில் மொத்தம் 2,241 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 7.40 பொருளாதாரம் கொண்டு 42 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார். இளையோரின் வரவால் புறம்தள்ளப்பட்ட யூசப் பதான் வரும் சீசனில் இல்லாமல் இருப்பது, IPL அணிகளின் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.