டி20 உலகக் கோப்பை 2022: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான அனைத்து நாடுகளும் தற்போது அங்கு சென்றடைந்து உள்ளன. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மாவின் இந்திய அணி பிரிஸ்பேனில் உள்ள 4 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்குவதற்கு 5 ஸ்டார் நட்சத்திர ஹோட்டல் வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் தொடங்கின. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் திங்கட்கிழமை பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.
மேலும் படிக்க | ரெக்கார்டுக்காக விளையாடாதீங்க கோலி; மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் முன்னாள் வீரர்
இந்திய அணிக்கு 4 ஸ்டார் ஹோட்டல் கொடுக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவைப் போலவே பாகிஸ்தான் அணியும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதுபோன்ற ஐசிசி நிகழ்வுகளுக்கான தங்குமிடத்தை தீர்மானிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு 'ரைட்ஸ் ஃபார்டிட்யூட் வேலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பயிற்சி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Touchdown Brisbane#TeamIndia pic.twitter.com/HHof4Le3mP
— BCCI (@BCCI) October 15, 2022
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் டி20 உலக கோப்பையில் இருந்து விலகல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ