எதற்காக பேட்டிங் தேர்வு?... ஹர்திக் பாண்டியாவின் விளக்கம்

குஜராத் டைட்டான்ஸ் அணியின் தோல்வி குறித்தும், பேட்டிங் தேர்வு செய்தது குறித்தும் அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 4, 2022, 02:37 PM IST
  • தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா விளக்கம்
  • குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப்
  • டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது குஜராத்
எதற்காக பேட்டிங் தேர்வு?... ஹர்திக் பாண்டியாவின் விளக்கம் title=

குஜராத் டைட்டான்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று ஐபிஎல்லில் மோதின. தொடர்ந்து வெற்றி பெற்ற தெம்போடு குஜராத்தும், கடந்த தோல்விக்கு பழி தீர்க்க வேண்டுமென்ற முனைப்போடு பஞ்சாப்பும் களமிறங்கின. டாஸ் வென்ற குஜராத் பலரும் ஆச்சரியப்படும்படி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த ஐபிஎல்லை பொறுத்தவரை டாஸ் வென்ற அணி ஒன்று பேட்டிங்கை தேர்வு செய்வது இதுவே முதல்முறை. இதனால் சிலர், பாண்டியாவின் கான்ஃபிடென்ஸ் அருமை என கூற, மற்றொரு தரப்பினரோ பாண்டியாவின் முடிவை விமர்சிக்கவும் செய்தனர்.

Pandya

இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது குறித்தும், தோல்விக்கான காரணம் குறித்தும் பாண்டியா கூறுகையில், “நாங்கள் 170 ரன் எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். முதலில் பேட்டிங் செய்ததற்கான எனது முடிவு சரி என்றே நினைக்கிறேன்.

மேலும் படிக்க | ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? சுனில் கவாஸ்கர் விளக்கம்

ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு சீரான பாதைக்கு திரும்புவது முக்கியம். நாங்கள் நன்றாக சேசிங் செய்து வருகிறோம்.

ஆனால் எங்களது பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை உறுதிசெய்ய விரும்பினோம். ஆனால் சரியான ஆட்டம் வரும்போது முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

Pandya

முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறேன். எந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது பற்றி ஆலோசித்து அதில் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மேலும் படிக்க | குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News