IND vs SA, U19 World Cup Semi Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓடிஐ உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜன. 19ஆம் தேதி தொடங்கியது. தொடரின் தொடக்கத்தில் 16 அணிகள் கலந்துகொண்ட நிலையில், குரூப் சுற்று, சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நிறைவடைந்தன. தற்போது இந்த 16 அணிகளில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அந்த வகையில், முதல் அரையிறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள சாஹாரா பார்க் வில்லோமூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப். 6) நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியா நிதான பந்துவீச்சு
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா இளம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், சௌமி குமார் பாண்டே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும் படிக்க | வெஸ்ட் இண்டீஸ் வீரர் கடத்தல் - தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சி
இந்தியா பரிதாப ஓப்பனிங்
தொடர்ந்து, 245 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஆதார்ஷ் கான் டக் அவுட்டாக, நான்காவது ஓவரில் முஷீர் கான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அர்ஷின் குல்கர்னி 12 ரன்களுக்கும், பிரியான்ஷூ மோலியா 5 ரன்களுக்கும் விக்கெட்டை விட இந்திய அணி 11.2 ஓவர்களில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது, கேப்டன் உதய் சஹாரன் உடன் ஜோடி சேர்ந்த சச்சின் தாஸ் இந்திய அணியை அதளபாதாளத்தில் இருந்து மீட்டு நம்பிக்கை அளித்தார். உதய் மிக நிதானமாக விளையாட சச்சின் பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி சுமார் 42.1 ஓவர்கள் வரை தாக்குபிடித்து. 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டுச் சென்றது எனலாம்.
The #BoysInBlue are into the FINAL of the #U19WorldCup!
A thrilling-wicket win over South Africa U-19
Scorecard https://t.co/Ay8YmV8QDg#TeamIndia | #INDvSA pic.twitter.com/wMxe7gVAiL
— BCCI (@BCCI) February 6, 2024
9ஆவது முறையாக இறுதிப்போட்டி
இருப்பினும் போட்டி 49ஆவது ஓவர் வரை சென்றது. இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்த பின்னர்தான், இந்தியா வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறஅறி பெற்று இறுதிப்போட்டிக்கு 9ஆவது முறையாக தகுதிபெற்றது. குறிப்பாக தொடர்ந்து 5ஆவது முறையாக (2016, 2018, 2020, 2022, 2024) இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
முன்னதாக, 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஐந்து முறை இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளனர். தற்போது 2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரும் பிப்.11ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மறுதினம் (பிப். 8) மோதுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ