இந்தூர்: வங்கதேச (Bangladesh) அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும், டிக்ளேர் என இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இன்று ஒரு பந்து கூட இந்திய அணி ஆடவில்லை. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை வங்கதேச அணி ஆடி வருகிறது. இந்த அணியை விட இந்தியா 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றி 10 விக்கெட் தூரமா? இல்லையா? 2வது இன்னிங்சை இந்திய அணி ஆடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக வங்கதேச (Bangladesh) அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இராண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேசஅணியை விட இந்தியா 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்த வரை மயங்க் அகர்வால் (Mayank Agarwal) இரட்டை சதம் அடித்து 243 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இது அவரின் இரண்டாவது இரட்டை சதமாகும். அதேபோல சர்வதேச டெஸ்ட் போட்டியில் மூன்றாவது சதமாகும். மறுமுனையில், அஜின்கியா ரஹானே (Ajinkya Rahane) ரன்களும், சேடேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) 54 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ரவீந்திர ஜடேஜா* (Ravindra Jadeja) 60(76) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
நேற்றை நிலவரப்படி, இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்தது. ஜடேஜா* 60(76), உமேஷ் யாதவ்* 25(10) ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இன்று தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆடும் என ஏதிர் பார்க்கப்பட்ட நிலையில், டிக்ளேர் அறிவித்தது.
நேற்று பந்து வீச்சை பொறுத்த வரை வங்கதேச அணியின் அபு ஜெயத் (Abu Jayed) 4 விக்கெட்டும், எபாதத் ஹொசைன் மற்றும் மெஹிடி ஹசன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
வங்கதேசம் மற்றும் இந்தியா (India vs Bangladesh) இடையே நடைபெற்று வரும் 2 போட்டிகளும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகும். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், முதல் போட்டி என்பதால் 60 புள்ளிகள் கிடைக்கும். தற்போது சாம்பியன்ஷிப்பில் இந்தியா 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் தொடங்கிய, இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 58.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக முஷபிர் ரஹிம் 43(105) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்த நிலையில் மொஹினுள் ஹாக்யூ 37(80) ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின், இஷான்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இத்தொடரின் முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷை அணியை ஒய்ட் வாஷ் செய்வது பலம் வாய்ந்த இந்திய அணிக்கு கடினம் இல்லை. இருப்பினும், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே இருவரும், பங்களாதேஷை எந்த வகையிலும் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு இந்திய அணி தந்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை 2-0 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்கா அணியை 3-0 என்ற கணக்கிலும் தோற்கடித்தது கிளின் ஸ்வீப் செய்தது. அதனை தொடர்ந்து, இப்போது சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச அணி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கிளின் ஸ்வீப் செய்ய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.