இந்திய அணிக்கு மேலும் அடி! இரண்டு புள்ளிகளை குறைத்த ஐசிசி!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி புள்ளியில் இருந்து இரண்டு புள்ளிகளை இந்தியா இழந்து, புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தானுக்கு கீழே சரிந்தது.  

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2022, 06:34 AM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது இந்திய அணி.
  • 5வது டெஸ்ட் தொடரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சரிவு.
இந்திய அணிக்கு மேலும் அடி! இரண்டு புள்ளிகளை குறைத்த ஐசிசி! title=

செவ்வாயன்று எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அண. இந்த டெஸ்ட் போட்டியின் போது ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இந்திய அணி இழந்துள்ளது. இந்த பெனால்டி புள்ளிகள் இந்திய தரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுக்கு சாதகமாக புஅமைந்துள்ளது. பெனால்டி புள்ளிகள் தவிர, இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | கெத்து காட்டிய இந்திய அணியை மூக்குடைத்த இங்கிலாந்து அணி

பர்மிங்காமில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு WTC புள்ளிகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது.  ஆனால் பெனால்டி புள்ளிகளை இழந்ததால் தற்போது பாகிஸ்தானுக்கு கீழே சென்று அட்டவணையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா இப்போது 75 புள்ளிகளுடன் (புள்ளி சதவீதம் 52.08), பாகிஸ்தானின் பிசிடி 52.38 சதவீதத்திற்கு கீழே உள்ளது.

வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.  கூடுதலாக, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) விளையாடும் நிபந்தனைகளின் பிரிவு 16.11.2 இன் படி, ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது.  இந்திய அணி தரப்பு இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதால், இரண்டு WTC புள்ளிகளை தற்போது இழந்துள்ளது.  ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஜோடி இங்கிலாந்துக்கு டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகரமான ரன் சேஸை செய்ய உதவியதால், இந்தியா 378 ரன்களை இலக்காக வைத்து இருந்த போதிலும் தோல்வி அடைந்தது.

 

மேலும் படிக்க | பும்ரா வேகத்தில் நொறுங்கும் சாதனைகள்! 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News