பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில், காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு நபரை பேரணியில் இருந்து கூட்டத்தினரே அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கைதானவரிடம் விசாரணை நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவுகிறது.
தொடர்ந்து, அவரை பலரும் நலன் விசாரித்து வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து புது சர்ச்சை ஒன்றை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. அடுத்தாண்டு, 50 ஓவர் வடிவில் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை தொடரை, அங்கு நடத்த வேண்டாம் எனவும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Sorry, after incident of #ImranKhan
In my opinion Indian cricket team should not to travel Pakistan for #AsiaCup2023Whats your?
— Aniket Anjan (@AnjanAniket) November 3, 2022
அதில் ஒரு பயனர்,"இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு வருந்துகிறேன். அடுத்தாண்டு ஆசியக்கோப்பையை விளையாட இந்திய அணி, அங்கு செல்லக் கூடாது என்பது எனது கருத்து" என பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,"முன்னாள் பிரதமருக்கே அந்த நாட்டில் பாதுகாப்பில்லை. இதில் இந்திய அணி அங்கு விளையாட வர வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக். 18 நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில், பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா கூறிய கருத்துகள் ஆசியக்கோப்பை தொடர், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றால், அதில் இந்திய அணி பங்கேற்காது என கூறியிருந்தார். பாகிஸ்தான் இல்லாமல், இருவருக்கும் பொதுவான ஒரு நாட்டில் தொடர் நடைபெற்றால், அதில் இந்தியா பங்கேற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
Whosoever attacked Imran Khan has pushed Pakistan Cricket on backfoot. Even former Prime Minister isn't safe. It's a major security loophole that England, West Indies and other nations might consider. ICC will be under pressure too for Champions Trophy.#AsiaCup2023#ImranKhan
— Himanshu Pareek (@Sports_Himanshu) November 3, 2022
மேலும் படிக்க | 'இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்' பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு
இதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,"ஜெய் ஷாவின் கருத்துகள் ஒற்றைத்தன்மையாக உள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் சமூகத்தை பிரிக்கும் வகையில் உள்ளது. ஆசியக்கோப்பையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை தொடரிலும் (50 ஓவர்) சில தாக்கங்கள் ஏற்படும்.
இதனால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கலாம். 2024 - 2031ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஐசிசி தொடர்களிலும் இது எதிரொலிக்கும்" என குறிப்பிட்டுள்ளது.
Imran Khan Shot At Rally In Pakistan, 1 Killed, Many Injured.
Now, Don't Say Anyone That team India Should Go To Pakistan For Asia Cup 2023.
It's END Thank you Pakistan Once again Proving That Pakistan is Nota Safe Place Anymore .#ImranKhan #Pakistan #AsiaCup2023 pic.twitter.com/5htWnBkHoW
— Cricket Apna l Indian cricket l T20WC (@cricketapna1) November 3, 2022
இதற்கு,"இந்தியா பாகிஸ்தானுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவு. ஒட்டுமொத்தமாக, வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியமானது" என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அந்த வகையில், இந்திய ரசிகர்களின் இன்றைய பதிவுகள் பிசிசிஐயின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில், 2005-06ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மேலும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் 2012-13க்கு பிறகு இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் மோதிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிசிசிஐ என்னை தூக்கி எறிந்தாலும் நான் இதை செய்தேன் - முகமது ஷமி ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ