நியூசிலாந்து அணி எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் ஆட்டம் போட்டனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் நேற்று நடைபெற்றது.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்க முதலே பேட்டிங்கில் இந்திய அணி அதிரடி காட்டியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா(147) மற்றும் விராட் கோலி(113) ஆகியோர் சதம் அடித்தனர்.
வெற்றி பெற 338 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தனது பேட்டிங்கை தொடங்கிட்டது. நியூசிலாந்து வீர்களும் தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலே 16 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி15 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது. 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி மூன்று ஓவருக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 48 ஓவரில் மீண்டும் விக்கெட் விழுந்தது. இந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் நியூசிலாந்து அணி எடுத்தது.
2 ஓவருக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 49 ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில், கடைசி ஓவரை பும்ரா வீசினார். ஒவ்வொரு பாலும் ராசிகளுக்கு திக்..திக்.. என்று இருந்தது. பூமரா இந்த ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் பறித்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியது. ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாவும், விராத் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தேடுக்கப்ட்டார்.
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி வீரர்கள் ஜட் ஜி ஸ்டைலில் ஆட்டம் போட்டனர்.
Great team work, amazing win!
Celebrations.. Jatt ji style! pic.twitter.com/hkODublvBX— Virat Kohli (@imVkohli) October 29, 2017