உலகக்கோப்பை தோல்விக்கு பின், கையோடு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
முதல் டி20 போட்டி வரும் நவ. 18ஆம் தேதி வெல்லிங்டனில் நடைபெறுகிறது. தொடர்ந்து, அடுத்தடுத்த டி20 போட்டிகள் முறையே நவ. 20, 22 தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து, நவ. 25, 27, 29ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளன.
இந்தியா - நியூசிலாந்து இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடம் உதைவாங்கி வெளியேறியிருந்தது. இந்த தொடருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | டி20 போட்டிகளில் ஓய்வை அறிவிக்கும் மூன்று முக்கிய வீரர்கள்!
டி20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர். தொடர்ந்து, நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நியூசிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற போல்ட், குப்தில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் தொடரை முன்னிட்டு அமேசான் பிரைம் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்,"உம்ரான் மாலிக் மிகவும் திறமையானவர்.
தற்போது சர்வதேச அளவில் அவர் விளையாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் எங்களுடன் அணியுடனான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானதில் இருந்து அவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்றார். ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு உம்ரான் மாலிக் விளையாடியது நினைவுக்கூரத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர்,"ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டார். உலகின் மேட்ச் வின்னர்களில் அவரும் ஒருவர். ஐபிஎல் தொடரிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரை பெற்றவர். இந்திய அணியில் பல்வேறு திறமையான வீரர்கள் உள்ளனர், அதிலும் அனைவருடன் தனிப்பட்ட முறையில் பழக்கமுள்ளது. ரோஹித், விராட் ஆகியோரிடமிருந்து ஹர்திக் பாண்டியா பல நன்மைகளை பெறுவார்" என வில்லியம்சன் கூறினார்.
டி20இல் இங்கிலாந்து பாணியிலான அதிரடி அணுகுமுறை குறித்து வில்லியம்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"டி20 போட்டிகளை சிறப்பாக விளையாடும் பல்வேறு அணிகள் உலகின் உள்ளன. அந்த நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தே ஆட்டம் அன்றைய ஆட்டம் தீர்மானிக்கப்படும், அதை நீங்கள் இந்த உலகக்கோப்பையிலேயே பார்த்திருப்பீர்கள்.
இங்கிலாந்து ஒரு வலிமைான அணி. அதிரடியை ஆட்டத்தை கிரிக்கெட்டில் புகழ் பரப்பி வருகின்றனர். ஆட்டம் பரிணாமம் அடைவதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அனைத்தும் ஒரு வட்டம், வந்த இடத்திற்கே மீண்டும் வரும் என்பதையும் உணர வேண்டும்" என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தல தோனி! இந்த முறை என்ன பொறுப்பு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ