யார் இந்த சர்ஃபராஸ் கான்? விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்!

ரஞ்சி மும்பை அணியின் வீரர் சர்ஃபராஸ் கான் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 02:02 PM IST
  • ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் 243 பந்துகளில் 134 ரன்கள் குவிப்பு.
  • இரண்டாவது சீசனில் ரஞ்சியில் மும்பைக்காக 900 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தல்.
  • விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு.
யார் இந்த சர்ஃபராஸ் கான்? விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்! title=

மும்பை ரஞ்சி அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான், விரைவில் தனது முதல் இந்திய டெஸ்ட் அழைப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரஞ்சி டிராபியில் மும்பைக்காக 900 ரன்களுக்கு மேல் அடித்து அனைவரையும் திரும்பி பார்கவைத்துள்ளார்.  24 வயதான அவர், இந்த ஆண்டு நவம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

sarfaskhan

மேலும் படிக்க | TNPL: மன்கட் முறையில் அவுட் செய்த பாபா அப்ராஜித் - கடுப்பான சேப்பாக் வீரர்

இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சர்ஃபராஸ் கான், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷுக்குச் செல்லும் அணியில் இடம் பெற உள்ளார்.  

sarfaskhan

"இப்போது அவரைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை, அவரது அபார திறமை இந்திய அணியில் பலருக்கு அழுத்தம் கொடுக்கிறது. பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்யும் போது அவர் உறுதியாக இருப்பார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக அவர் தென் அரிகாவில் சிறப்பாக செயல்பட்டார், மேலும் ஒரு சிறந்த பீல்டர்" என்று பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.  ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியைத் தவிர, இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்தியா எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.  இந்த ஆண்டு ரஞ்சியில் ஃபார்மில் இருந்த சர்பராஸ் இதுவரை நான்கு சதங்களை அடித்துள்ளார்.  மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில், அவர் 243 பந்துகளில் 134 ரன்கள் குவித்து, மும்பை முதல் இன்னிங்ஸில் மொத்தம் 374 ரன்கள் குவிக்க உதவினார். 

மேலும் படிக்க | ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! - வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News